பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகர் கோயில் $64

மலையில் விளங்குதல் போலவே இருங்குன்றத்திலும் நின்ற திருக்கோலத்தில் இலங்கும் தன்மையைப் பாடுகின்றார் இளங்கோவடிகள். இவ்வாறு வேங்கடம் ஆகிய திருப்பதி மலைக்கும், இருங்குன்றம் என்னும் சோலைமலைக்கும் நெருங்கிய ஒற்றுமை இருத்தலால் தென் திருப்பதி என்ற பெயரும் சோலை மலைக்கு வழங்கி வருகின்றது.

சோலை மலையில் நின்று அருள் புரியும் திருமாலின் அடியினை தொழுது அடைக்கலம் புகுந்த அடியார் பலர். சோலைமலையை ஆளும் அரசே துளவமாலை அணிந்த திருமாலே ! புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்து அலமரும்போது உன் திருவடியைத் தஞ்சம் அடையும் வகை அறியேன். ஆதலால் காலன் வரு முன்னே, கண் பஞ்சடையும் முன்னே அடியேன் உன் திருவடியில் அடைக்கலம் புகுந்தேன்’ என்று மன முருகித் தொழு கின்றார் ஒரு திருமாலடியார்’

சோலைமலையிலே கோயில் கொண்ட திருமால் கண் ணழகர்; வாயழகர் தோளழகர் தாளழகர். ஆதலால் அழகர் என்னும் பெயர் அவர்க்கே உரியதாயிற்று. அவர் வாழும் மலையும் அழகர் மலை என்னும் பெயர் பெற்றது. அரும்பெருஞ் சோதியாய் அம்மலையிலே நின்றருளும் அழகரைக் கண்களிப்பக் கண்டார் நம்மாழ்வார்; அவர் திருமேனியின் எழுதரிய அழகினைக் கண்ணால் முகந்து பருகினார்; உள்ளம் உருகினார்.

“ முடிச்சோதி யாய்உனது

முகச்சோதி மலர்ந்ததுவோ அடிச்சோதி நீதின்ற

தாமரையாய் அலர்ந்ததுவோ படிச்சோதி ஆடையொடும்

பல்கலனாய் நின்டைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ - திருமாலே கட்டுரையே” என்று ஆராத அன்பினால் அகம் குழைந்து பாடினார்.