பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$65 ஆற்றங்கரையினிலே

திருமால் இருஞ்சோலை என்று திருவாய் மொழியிலே போற்றப் படுகின்ற சோலைமலை, பாரதம் பாடிய பெருந் தேவனாரது உள்ளங் கவர்ந்த உயரிய தலங்களுள் ஒன்றாகும். தமிழகத்தின் வடக்கெல்லையாகத் திகழும் திருவேங்கடம் என்னும் திருப்பதியும், காவிரியாற்றின் நடுவே கருணை மாமுகிலாகிய திருமால் கண்ணுறங்கும் திருவரங்கமும், கற்றவர் போற்றும் கச்சி மாநகரமும், திருமால் இருஞ்சோலை என்னும் சோலைமலையும் பிறவித்துயர் கெடுக்கும் பெரும்பதிகள் என்று போற்றுகின்றார் பெருந்தேவனார்.”

‘ நாடறிந்த கள்வன் நாரணன் ஆவன்’ என்ற பழ மொழிக்கு ஏற்பச் சோலைமலை அழகர், கள்ள அழகர் என்று அழைக்கப் படுகின்றார். அடியாரது உள்ளம் கவர்ந்து ஆட்கொள்ளும் சோலைமலை அழகரை வஞ்சக் கள்வன், மாமாயன் என்று புகழ்ந்து போற்றினார் நம்மாழ்வார். -

‘செஞ்சொற் கவிகாள் உயிர்காத்து

ஆட்செய்மின் திருமால் இருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன்

மாயக் கவியாய் வந்துஎன் நெஞ்சும் உயிரும் உள்கலந்து

நின்றார் அறியா வண்ணம்என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு

தானே ஆகி நிறைந்தானே.” என்று அப் பெருமான் பாடிய திருவாய் மொழியின் அடியாகச் சோலைமலை அழகர் கள்ள அழகர் ஆயினார் என்றும் கூறுவதுண்டு.

கள்ள அழகருக்குரிய மலைக் கோட்டையில் கண்ணய ராமல் நின்று காவல் புரிகின்றான் கறுப்பன் என்னும் வீரன், பதினெட்டாம் படிக் காவலனாகிய கறுப்பனை நினைக்கும் பொழுதே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்: