பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பாவைப்பாட்டு

மழைக் காலம் கழிந்தது: மார்கழி பிறந்தது. விடியற் காலத்தில் பறவைகள் எழுந்து பாட்டிசைத்தன. திருக் கோயில்களில் காலைச் சங்கம் முழங்கிற்று. இன்னிசை வீணையர் ஒருபால் நின்று பண்ணார்ந்த பாட்டின்சத்தனர். சென்னியில் அஞ்சலி கூப்பிய அன்பர்கள் ஒருபால் நின்று செஞ்சொற்கவி பாடினர். எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே என்ற அடியார் குரல் எங்கும் பரந்து நிறைந்தது.

இத்தகைய இனிய காலைப் பொழுதில் நீராடப் புறப் பட்டனர் இளங் கன்னியர்; எழுந்திராத தோழியரின் வீடு தொறும் சென்று துயிலுணர்த்தினர்.

“ புள்ளும் சிலம்பினகாண்

புள்ளரையன் கோயிலிலே வெள்ளை விளிசங்கின்

பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய்.”

என்று இசையினும் இனிய குரல் கொடுத்து அழைத்தனர். அப்போது பள்ளியை விட்டு எழுந்து வந்தார் சில பாவையர் மற்றும் சிலர் கதவைத் திறவாமல் கடுந் துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரிடமும் பரிவுகூர்ந்து ஐயோ! இப்படியும் உறங்குவார் உண்டோ? கதவைத் தட்டினோம் ! கையைக் கொட்டினோம் பாடினோம் ஆடினோம் ! ஒன்றும் பயனில்லையே !