பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 ஆற்றங்கரையினிலே

“ கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல்

உடையாய், அருங்கலமே தேற்றமாய் வந்து

திறவேலோர் எம்பாவாய்”

‘அம்மா தோழி 1 அரக்கனாகிய கும்ப கருணனிடம் நீ உறக்கம் பயின்றாயோ? அவன் இறக்கும்பொழுது உறக்கத்தை யெல்லாம் உன்னிடம் இறக்கி விட்டானோ ?” என்று பாடி எழுப்பினர்.

இவ்வாறு வல்லுறக்கம் கொண்ட கன்னியருள் ஒருத்தி வாயாடுவதில் வல்லவள். அவள் எழுந்து கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்; நாணிக்கோணி நின்றாள். அவளைப் பார்த்து, மானின் நேர்விழி மாதே; நீ தேன் ஒழுக நேற்றுப் பேசினாயே நாளைப் பொழுது புலர்வதன் முன்னம் நானே வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று சொன்னாயே ! அந்தச் சொல் எந்தத் திசை வழியாய்ச் சென்றதோ? அல்லது உனக்கு இன்னும் பொழுது விடிய வில்லையோ?” என்று அசதியாடினர்.

எல்லோரும் வந்து சேர்ந்தவுடன் இறைவன் திருப் புகழைப் பாடிக்கொண்டு நீராடும் துறையை நோக்கி நடந்தனர். மாலே மணிவண்ணா மதுசூதா ! ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழே பாடுவோம்; ஆடுவோம்; வல் வினையை வேரறுப்போம் என்றனர் திருமாலைப் போற்றும் கன்னியர்.

சிவனடியாராகிய சிறுமியர் எம்மையாளும் ஈசனே ! பழமைக்கெல்லாம் பழமையான பரம்பொருள் நீயே ! புதுமைக் கெல்லாம் புதுமையாய் நின்ற புனிதனும் நீயே ! செம் பொருளாகிய நின்னை எம்பிரானாகப் பெற்றோம் !