பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவைப்பாட்டு 170

நின் மெய்யடியாரையே பணிந்து மணந்து வாழ்வோம்; என்று பாடினர்’

நீராடும் துறையைக் கண்டபோது நங்கையர் நெஞ்சம் களித்தது; முகம் மலர்ந்தது. கைவளை ஒலிக்க, காலணி சிலம்பக் கடிது சென்று தண்ணிரின் உள்ளே பாய்ந்து மூழ்கினர்; மிதந்தனர் நீந்தினர். காதில் அணிந்த குழையாட கழுத்தில் அணிந்த இழையாட மாலை சூழ்ந்த குழல் ஆட, மகிழ்ந்து வண்டின் குழாம் ஆட அங்கும் இங்கும் ஓடினர்; ஈசன் புகழ் பாடினர்.

“காதார் குழையாடப்

டைம்பூண் கலன்ஆடக் கோதை குழல்ஆட

வண்டின் குழாம்ஆடச் சீதப் புனல்ஆடிச்

சிற்றம் பலம்பாடி’ இன்புற்ற இளங்கன்னியரின் கோலத்தைத் திருவெம்பாவை பாடிற்று.

பாவைப் பாட்டுப் பாடிப் பரமன் அடிதொழுதால்

மாதம் மும்மாரி பொழியும் பசியும் பிணியும் ஒழியும் என்பது பழந்தமிழ் நாட்டார் கொள்கை, கருணை வாய்ந்த மேகத்தைக் கைகூப்பித் தொழுது, வான் முகிலே நீ கருங்கடலின் நீரைக் கவர்ந்து, திருமாலின் உருவம் போல் மெய் கறுத்து, அப் பெருமான் கையிலமைந்த சங்கு போல் முழங்கி, சக்கரம் போல் மின்னி, சரம் உமிழும் சார்ங்கம் போல், நாடு செழிக்க மழை பொழிவாயாக’ என்று நயந்து வேண்டினர் திருமாலைத் தொழும் நங்கையர்.

அப்படியே சிவனடியாராகிய சிறுமியரும் வானத்தை நோக்கிக் கைம்மாறு கருதாக் கருணை முகிலே ! நீ நெடுங் கடலின் நீரை முகந்து உண்டு, எம்மையாளுடைய உமையம் மையின் மேனிபோல் கறுத்து, அவள் சிலம்பு போல்