பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 ஆற்றங்கரையினிலே

ஒலித்து, மருங்குல் போல் மின்னி, புருவம்போல் வில்லிட்டு, முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் ‘ என்று கைப்பித் தொழுதனர்

மார்கழித் திங்களில் வைகை யாற்றிலே இளங் கன்னியர் நீராடி வையகம் முழுவதும் மழை வளம் சிறக்குமாறு மாதேவியை வேண்டி, ஆடலும் பாடலும் நிகழ்த்துதல் வழக்கம் என்று பரிபாடல் என்னும் பழந்தமிழ் நூல் கூறுகின்றது. கோகுலத்தில் வாழ்ந்த ஆயர்குலச் சிறுமியரும் மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, கண்ணன் புகழ்பாடி யமுனை யாற்றில் நீராடி மகிழ்ந்த செய்தியைத் திருப்பாவை குறிக்கின்றது:

மணிவண்ணனாகிய திருமாலை மனங்குளிரப் பாடி யமுனையில் நீராடும் மங்கையர் புனிதமான மணல் எடுத்துப் பராசக்தியாகிய பார்வதியம்மையின் திருவுருவம் செய்வர் தூபமும் சாந்தமும் கொண்டு போற்றுவர்; எங்கள் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து நிற்கும் கண்ணனை எம் கணவனாகத் தருவாய் அம்மே என்று கைகூப்பித் தொழுவர். இப்பாவை நோன்பின் சீர்மை பாகவதப் பாட்டால் இனிது விளங்கும்.’

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை யெனப் பணிதல் ஆக்கம் என்று பாரதியார் பாடிய முறையில் பராசக்தியை வியந்து திருவெம்பாவை பாடினார் மாணிக்கவாசகரும். மார்கழித் திருவாதிரையோடு முடிவுறும் பத்து நாளிலும் மங்கையர் பார்வதி தேவியின் பாதத்திறம் பாடிப் பணி நீராடுவர்.’

மார்கழித் திங்களில் நடைபெறும் விழாக்களுள் தலை

சிறந்தது திருவாதிரையாகும். மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப் போகுதையே கட்டையிருக்கையில் சிதம்பரம்