பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி மாநகரம் - 16

பற்றியும் மதங்களின் நிலைமையைப் பற்றியும் சில குறிப்புகள் எழுதிப் போந்தார். கல்வி கேள்விகளிற் சிறந்தவர் வாழும் நகரம் காஞ்சிபுரம் என்றும், வாய்மை நெறி வழுவாத மக்கள் அங்கு வாழ்பவர் என்றும் பாராட்டியுள்ளார் அவ் அறிஞர். இந் நகரிற் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானியை வடநாட்டார் வருக என்று அழைத்து நாளந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவ ராக்கிய செய்தியும் அவர் குறிப்பிலே காணப்படுகின்றஆl.

சைவமும் வைணவமும், சமணமும் சாக்கியமும் தங்கு தடையின்றிக் காஞ்சிமாநகரில் சிறந்து வளர்ந்தன. இந் நகரில் அரசு வீற்றிருந்த பல்லவ மன்னரிற் சிலர் சமண சமயத்தை ஆதரித்தனர். ஆயினும் நாளடைவில் சைவமும் வைணவமும் வளர்ந்து வலுப்பெற்றன; சமணமும் சாக்கியமும் தளர்ந்தன. இன்றும் சமண மதத்தின் குறிகளும் அடையாளமும் காஞ்சிமாநகரில் உண்டு. அந் நகரைச் சேர்ந்த திருப்பருத்திக் குன்றத்தில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கே பல்லவ மன்னனால் கட்டப்பட்ட பழைமையான திருக்கோவில்களும், சமண முனிவர்க்கு ஒளி நெறி காட்டிய குரவ மரமும், ஆன்றோர் ஐவரை அடக்கம் செய்துள்ள “அருணகிரி மேடு”ம் சென்ற காலத்தின் சிறப்பினை ஒருவாறு உணர்த்தும் சின்னங்க ளாகும்.

‘சமண காஞ்சி” என்று பெயர் பெற்றுள்ள திருப்பருத்திக் குன்றத்தில் அகளங்கன் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்தார். அவர் குரவ மரத்தின் கீழிருந்து கடுந்தவம் புரிந்து மாற்றாரை வாதில் வெல்லும் ஆற்றல் பெற்றார். பல்லவ மன்னனின் ஆதரவு பெற்றுச் சாக்கிய முனிவர்களை வாக்கு வாதத்திற்கு அறைகூவி அழைத்தார். விறுவிறுப்பாக நிகழ்ந்த வாதத்தில் சாக்கிய முனிவர்கள் தோற்றார்கள் அகளங்கன் வெற்றி பெற்றார். அதனால் அரசன் ஆணைப்படி சாக்கிய மதத்தார் தமிழ் நாட்டை