பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெல்வேலி - $78

தமிழ் மொழிகளைச் செவி குளிரக் கேட்டுக் காந்திமதியம்மை மனமகிழ்கின்றாள் என்று பாடுகின்றார் கவிஞர்.

“மலையத் தமிழ்கேட்டு உளமகிழும்

வாழ்வே வருக ! வருகவே ! வரைமால் வனத்துத் திருநெல்லை

வடிவே ! வருக ! வருகவே !”

என்று ஆர்வமுறப் பாடிய கவிஞர் தாய்மை உள்ளத்தோடு மேலும் கூறுகின்றார்: ‘ குழந்தாய் ! நீ வாராது இருந்தால் உன் கண்ணுக்கு மையெழுதேன்; நெற்றிக்குத் திலகமிடேன்; அழகான நகை அணியேன்; அடுத்தடுத்துக் கதை சொல்லேன்: இனிப்பான பாலூட்டேன்; ஒக்கலையில் வைத்துத் தேரோடும் வீதியின் வளங் காட்டேன்; தொட்டிலில் வைத்துத் தாலாட்டேன்; ஆதலால் தவழும் குழந்தாய் ! காந்திமதித் தாயே வருக ! வருக !’ என்று அழைக்கும் முறை சால அழகியதாகும்.”

இப்பிள்ளைத்தமிழ் திருநெல்வேலிக் கோவிலில் அரங் கேற்றப் பெற்றது. அக்காலத்தில் இருந்த முருகதாசர் முதலிய அருட் கவிஞர்கள் பிள்ளைத்தமிழின் அழகினைப் பாராட்டினார்கள். காந்திமதியின் கருணையால் சிறந் தோங்கி வளரும் நெல்லை மாநகரம் திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யென்று திருஞான சம்பந்தர் வழங்கிய வாய்மொழியை மெய்ப்பித்துப் பல்லாற்றானும் சிறந்து ஓங்கி விளங்குகிறது.