பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. திருக்குற்றாலம்

ஆற்று வளமும் அருமையான காற்று வளமும் உடையது திருக்குற்றாலம். மஞ்க தவழும் சோலை சூழ்ந்த குற்றால மலையில் மழை பொழியும்; அருவி சொரியும்; வெள்ளம் ஆறாகப் பாய்ந்து ஓடும். அங்கு,

“ ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” என்று பாடினார் குறவஞ்சிக் கவிஞர். சிற்றாறு என்னும் சித்திரா நதியில் பெருகி வரும் வெள்ளமும், திருக் குற்றாலத்தில் நற்றவம் புரியும் சான்றோர் உள்ளமும் இக் கவிதையால் அழகுற விளங்குகின்றன.

திருக்குற்றாலத்தில் அருவிகள் பல உண்டு. வட அருவி என்பது சிறந்ததோர் அருவி. பொங்குமாகடல் என்னும் ஆழச் சுனையில் மூழ்கி எழுந்து பரந்து வீழும் அவ் வருவியைக் காண்பது ஒர் ஆனந்தம். இன்னும், ஐந்து கவராகப் பிரிந்து வீழும் அருவியும் அம் மலையிலே உண்டு. ஐந்தலை அருவி என்பது அதன் பெயர். தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும் என்று புகழப் பெற்ற தேனருவியும், சிற்றருவி என்று சொல்லப்படும் கானருவியும் குற்றாலத்தில் உண்டு. இவ் அருவித் துறைகளில் நீராடி இன்புற்றவர் எண்ணிறந்தவர்.

Forest Falls.” என்னும் ஆங்கிலப் பெயர் உடையது இவ்வருவி.