பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குற்றாலம் $30

மேலை நாட்டு மேதையரும் போற்றிப் புகழும் பெருமை வாய்ந்தது திருக்குற்றால அருவி. மேலை நாட்டிலே பிறந்த அறிஞர் ஒருவர் கிறிஸ்தவ சமயத் தொண்டு செய்வதற்காகத் தமிழ் வழங்கும் தென்னாட்டில் வந்து சேர்ந்தார். அரை நூற்றாண்டு அந்நாட்டில் வாழ்ந்து என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டார் தமிழின் தொன்மையையும் செம்மையையும் உலகறியக் காட்டிய பெருமை அவருக்கே உரியதாகும். இத்தகைய அரும்பணியில் ஈடுபட்ட அப் பெரியார் கடுமையான வேனிற் காலத்தில் குற்றாலம் போந்து அருவியாடி இன் புற்று வந்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் ஆசையால் அவ்வருவியின் பெருமையைப் பாராட்டியுள்ளார். இந் நானிலத்தில் உள்ள நன்னீர் அருவிகளுள் தலை சிறந்தது குற்றால அருவி என்னும் பொருள்பட அவர் வழங்கிய புகழுரையைத் திரு நெல்வேலி வரலாறு’ என்ற ஆங்கில நூலிலே காணலாம்:

மலையடிவாரத்தில் அமைந்த திருக்குற்றாலத்தில் கோங்கும் வேங்கையும், சந்தனமும் சண்பகமும் செழித் தோங்கி வளரும். வளமுற வளர்ந்த இம்மரங்களில் முல்லைக் கொடிகள் பின்னிப் பூத்து மணம் கமழும். வேங்கை மரத்தின் பொன் போன்ற மலர்களைப் பறித்துக் குறும்பலா மரத்தடியில் அமர்ந்த இறைவன் திருவடியிலே தூவி வணங்குவர் சிவனடியார். நாள்தோறும் இக் காட்சியைக் கண்ட யானைகளின் உள்ளத்திலும் ஆர்வம் பெருகிற்று தாமும் குறும்பலா ஈசனைக்கும்பிட வேண்டும் என்னும் ஆசையால் ஆணும் பெண்ணுமாகப் பூப் பறிக்கப் புறப்பட்டன. ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த மலர்களைத் தம் துதிக்கையால் வளைத்துப் பறித்து மத்தகத்தில் ஏந்திக்கொண்டு, குறும்பலாவிற் போந்து தலை வணங்கித் தொழுதன. அந்

(* History of Tinnevelly by Caldwell, P.8.)