பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f83 ஆற்றங்கரையினிலே

என்று கூத்தாடுகிறான். பிடித்த பறவைகளை எடுத்துக் கொண்டு காதல் மனையாளாகிய சிங்கியைக் கான விரைந்து சென்றான்.

வீட்டிலே சிங்கியைக் காணவில்லை. சிங்கனது முறுக்கு மீசை துடித்தது. என்னிடம் சொல்லாமல் எங்கே போனாள் இவள்? எப்படிப் போனாள் ? என்று வெறு வீட்டைப் பார்த்து வெகுண்டு வினவினான்.

சில நாள் கழித்துச் சிங்கி வந்து சேர்ந்தாள். பட்டு உடுத்து, பணி பூண்டு, சீவி முடித்துச் சிங்காரமாக வந்த

சிங்கியைக் கண்டான் சிங்கன். சினமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது.

“ இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்

எங்கே நடந்தாய் நீ, சிங்கி”

என்று மெத்த அன்போடு கேட்டான்.

“கொத்தனர் குழலார்க்கு வித்தார் மாகக்

குறிசொல்லப் போனேன்.அடா - சிங்கா”

என்ற கனிவான மறுமொழி கிடைத்தது.

அவள் சுற்றிக் கட்டியிருந்த பட்டுச் சேலையைப் பார்த்து வியப்புற்று சிங்கன்,

“இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்

நீ, சிங்கி”

என்று மெல்ல நெருங்கினான்.

“நல்லாரைக் காண்பவருக்கு

எல்லாம் வரும்அடா, சிங்கா” என்று அறவுரை பகர்ந்து பேச்சை முடித்தாள் ஆசைக் குறத்தி !