பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485 ஆற்றங்கரையினிலே

வடகரையில் நின்ற செண்பக வனத்தில் ஈசனுக்கு ஒரு திருக்கோயில் எடுத்தான் பராக்கிரம பாண்டியன்: பதினேழு ஆண்டு அத்திருப்பணியில் ஈடுபட்டான். கோயிற் பணி முடிந்தது. கோபுர வேலை அரைகுறையாக இருந்தபொழுது இறைவன் திருவடி சேர்ந்தான் மன்னன். குடிகள் எல்லாம் வாடித் துடித்தனர் கண்ணிர் வடித்தனர். காசி கண்ட காவலனே எடுத்த திருப்பணியை முடிப்பதற்கு முன் எங்கே சென்றாய் ? என்று ஏங்கினர்:

தென்காசி கண்ட எங்கள் மன்னன், செயற்கரிய செய்து சிவகதியுற்ற திருத்தொண்டர் குழாத்திற் கலந்தானோ? வெள்ளி மாமலையில் வீற்றிருந்தருளும் விமலன் திருவடி அடைந்தானோ? பூலோக கைலாசம் என்னும் தில்லைப் பொன்னம்பலத்தில் புகுந்தானோ? அழிவற்ற மறையோடு மறையாய் மறைந்தானோ? சிவலோகத்தில் சென்று சேர்ந்தானோ? இரு காசியிலும் கோயில் கொண்ட ஈசன்தாள் எய்தினானோ ? என்று அன்னார் வருந்தினார்.

பணியுமாம் என்றும் பெருமை என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு ஒரு சான்றாக விளங்கினான் பராக்கிரம பாண்டியன். பல்லாண்டுகளாக மெய் வருத்தம் பாராது, அல்லும் பகலும் உழைத்து பொன்னும் பொருளும் செலவிட்டுக் கட்டிய ஆலயத்தில் தன் புகழ் விளங்க வேண்டும் என்ற ஆசை இறையளவும் அம்மன்னன் மனத்தில் இல்லை. இது என் செயல் அன்று என்னை ஆளும் ஈசன் செயல்’ என்று எல்லோரும் அறியக் கல்லிலே எழுதியுள்ளான் இக் காவலன். ஈசன் அருளால் அமைந்த இந்தக் கோயில் எல்லார்க்கும் சொந்தக் கோயில், மேலும் மேலும் இவ் வாலயத்தில் திருப்பணி செய்வாரது அடியில் விழுந்து அடியேன் தொழுவேன்; அவர்க்குத் தொழும்பனாய்ப் பணி செய்வேன்’ என்று பார் அறியக் கூறினான் பராக்கிரம பாண்டியன்: