பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 - ஆற்றங்கரையினிலே

விட்டு அகன்றனர். வெற்றி பெற்ற அகளங்க முனிவரை இன்றும் சமண காஞ்சியில் வாழும் மக்கள் பாராட்டிப் போற்றுகின்றார்கள்.

காஞ்சி மாநகரம் தெய்வம் மணக்கும் திருநகரம். எம் மருங்கும் கோயில்களும் கோட்டங்களும் நிறைந்து, இறையொளி வீசும் இந்நகரில் “கச்சி ஏகம்பா !” என்று கைகூப்பித் தொழுவாரும், “கஞ்சி வரதப்பா !” என்று கசிந்துருகி நிற்பாரும் எண்ணிறந்தவர். கண்ணுக்கினிய பூஞ்சோலையின் இடையே, ஒருமாவின் கீழ்க் கோயில் கொண்ட மங்கை பங்கனை, “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி “ என்று அருந்தமிழ் மலரால் அருச்சனை செய்தார் மாணிக்கவாசகர். -

இத்தகைய பெருமை வாய்ந்த கச்சி ஏகம்பத்தின் முன்னின்று கதறி அழுதார். ஒரு திருத் தொண்டர். “கருணையே உருவாய கச்சி ஏகம்பா ! உன் அருமைத் திருமேனியைக் காணக் கண் இல்லையே கண்கள் மூன்றுடைய கச்சியப்பா ! உன் அடியவனாகிய என்னைக் கண்ணறையன் என்று மண்ணுலகம் பழிக்கின்றதே தன் நிகரில்லாத் தலைவா ! இது உனக்குத் தகுமோ? பேதையேன் அறியாமல் செய்த பிழையெல்லாம் பொறுத்து அருள் புரிவாய் ! கண்ணொளி தந்து எளியோனைக் காத்தருள்வாய் !” என்று மனம் உருகித் தொழுது நின்றார். அந்நிலையில் இறைவன் அருளால் அவர் கண்ணில் ஒளி பிறந்தது. கச்சி ஏகம்பரது கருணைத் திருமேனி தெரிந்தது. மெய்யரும்பி, விதிர் விதிர்த்து ஆடினார். பாடினார் அத்திருத் தொண்டர்.

“ கால காலனைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே ”

என்று கண் அளித்த பெருமானது கருணையை வியந்து பாடினார். இவ்வாறு கச்சி ஏகம்பத்தில் கண் பெற்றுப்