பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்காசி #38

என்ற குறவஞ்சிப் பாட்டால் இவ்வரலாறு விளங்கும். இப் புதுமை கண்ட அடியொட்டுப் பாறை இப்பொழுது பொது மக்கள் உலாவும் பூஞ்சோலையாகத் திகழ்கின்றது.

தென்காசி நகரிலே தென்றல் தவழும் இளவேனிற் காலம் மன்னன் மாளிகையில் தன்னந் தனியளாய் இருக் கின்றாள் அரசமாதேவி, மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றிலே வாடுகின்றாள். சோலையிலே ஆனும் பெண்ணுமாய்க் கூடிக் குலாவும் அன்னங்களைக் கண்டு அகம் குழைகின்றாள். மதுரைக்குச் சென்ற என் மன்னர் என்று வருவாரோ?’ என்று மயங்குகின்றாள். செந்தமிழ் இன்பத்திலே திளைத்திருக்கும் அவர் நெஞ்சம் இங்கே இளைத்து வாடும் என்னையும் நினைக்குமோ என்று ஏங்குகின்றாள்.

“என்னை இவ்வாறு அவர்மறந்தும்

யான்அவரை மிகநினைந்திங்கு

இருந்து வாட முன்வினைப் பயன்தானோ

இப்பிறப்பில் செய்ததவம் முடிந்த வாறோ கன்னன்மதன் அபிராமன்

வரதுங்க ராமன்இயற்

காசி நாட்டில் அன்னவயற் குருகினங்காள்

இனின்வவாறு உயிர்தரித்திங்கு

ஆற்று மாறே ” என்று தன் உணர்ச்சியை யெல்லாம் தமிழ்ப் பாட்டிலே உகுத்து ஆற்றாமையை மாற்ற முயல்கின்றாள். அன்பின் சுவையறிந்த அன்னங்காள் ! என் காதலராகிய காவலர் செஞ்சொற் கவிஞர். அவர் அருந்தமிழ் நூலொன்று இயற்றினார். தேமதுரத் தமிழோசை நிரம்பிய அந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றக் கொண்டு