பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பாவநாசம்

பொய் அறியாப் புலவர் பாடும் பெருமை உடையது பொருனை என்னும் திருநதி, “தமிழ் முனிவன் வாழும் மலை” என்று தக்கோர் புகழும் பொதிய மலையிலே பிறந்து, ஒரு காத வழி நடந்து, தென் தமிழ் நாட்டிலே பாலருவியாய் வீழ்ந்து பரந்து பாயும் பொருனையாற்றின் அழகினைப் புகழ்ந்தனர் பாவலரும் நாவலரும்.

“ திங்கள்முடி சூடுமலை

தென்றல்விளை யாடுமலை தங்குமுகில் சூழுமலை

தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மை,திரு

அருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி துங்குமலை

பொதியமலை என்மலையே “ என்று ஒரு குறவஞ்சியின் வாயிலாக அம்மலையின் வளம்பாடி மகிழ்ந்தார் குமரகுருபர முனிவர். “தண்ணார் தமிழ் அளிக்கும் தண் பாண்டிநாடு” என்று மாணிக்க வாசகர் வியந்து போற்றிய நன்னாட்டை வாழ்விக்கும் பொதிய மலையிலே குளிர்மை வாய்ந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு இறும்பூதெய்துகின்றாள் குறவஞ்சி. “பெருமை சான்ற பொதிய மாமலையே! தண்மையுடைய வெண்மதியை நீ முடியிலே அணிந்தாய் ! வண்மையுடைய முகிலை வண்ணத் துகிலாக உடுத்தாய் ! நீ ஈன்றெடுத்த தென்றல் என்னும் பூங்காற்று எம்மருங்கும் தவழ்ந்து