பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஆற்றங்கரையினிலே

விளையாடக் கண்டு மகிழ்ந்தாய் ! எத்திசையும் புகழ் மனக்கும் முத்தமிழின் முதுபெருந் தொண்டனாகிய திரு முனிவன் என்றும் இருந்து வாழ இடம் தந்தாய் ! அகில மெல்லாம் காத்தருளும் அங்கயற்கண் அம்மையின் கங்கு கரையற்ற கருணைபோல் பொங்கிப்.பொழியும் பொருனை யாற்றின் அருவியால் பொலிவுற்றாய் இயற்கை இன்பம் தரும் தென் மலையாகிய நின்னை என் மலையாகப் பெற்றேன். பெருமிதம் உற்றேன்” என்று செம்மாந்து பேசுகின்றாள் அம் மங்கை -

இத்தகைய இனிய தமிழ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பாவநாசம் என்னும் பழம் பதி. பொருனையாற்றின் புண்ணியத் துறைகளுள் தலைமை சான்றது அப்பதியே. மெய்யடியாரது பாவத்தையெல்லாம் போக்கவல்ல பரம்பொருளாகிய ஈசன் பொருனையாற்றின் கரையிலே கோயில் கொண்டுள்ளான். உலகம்மை என்னும் உமாதேவியோடு பாவநாசனாகிய ஈசன் அமர்ந்தருளும் திருக்கோயிலின் முன்னே பணிந்து செல்லும் பொருனையாற்றின் தெளிவையும், அவ் ஆற்றில் இறங்கி நீராடுவதற்கு அமைந்த படித்துறையின் அழகையும் காண்பது ஒர் ஆனந்தம். திருவாரூர்த் தேர் அழகும், திருவிடைமருதுர்த் தெரு அழகும் பாவநாசப் படி அழகும் கண்ணாற் கண்டு களிக்கத் தக்கனவாகும். பழமரச் சோலையின் நிழலில் பாங்குற அமைந்த பாவநாசப் படித்துறையை, -

“பொதும்பர் நிழல்குளிர் தூங்கப்

பொலிந்த படித்துறை” என்று பாராட்டினார் ஒரு பாவலர். அப் படித்துறையை மருவி ஒடும் நதியிலே எண்ணிறந்த மீன்கள் அணியணியாக