பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவநாசம் 194

நீந்திச் செல்லும் ஆற்றின் மீது அழகாகக் கவிந்த மரக் கிளைகளில் வானரங்கள் மந்தியோடு கொஞ்சிக் குலாவும்.

இயற்கை நலம் வாய்ந்த பாவநாசப் படித்துறையில் நாள்தோறும் நீராடிப் பூசனை புரிந்து உலகம்மையை உள் ளன்போடு வழிபட்டு வந்தார் ஒரு கவிஞர். அவர் ஒருகால் உலகம்மையிடம் பிரியா விடை கொண்டு இராமேச்சரத் திற்குச் சென்றார்; இராமநாதனைக் கண் களிப்பக் கண்டு வணங்கினார். அக்காலத்தில் இராமேச்சுர தரிசனம் செய்தோர் இராமநாதபுரம் போந்து சேதுபதியையும் காண்பது வழக்கம். இராமநாதனை வழிபட்ட பலன் சேது மன்னரைக் காண்பவர்க்கே கிடைக்கும் என்பது அன்னார் கொள்கை. அந்த முறையில் இராமநாதபுரத்திற்குச் சென்றார் கவிஞர். ஆயினும் மாளிகையின் உள்ளே தலைகாட்ட முடியவில்லை. இவரை “ ஏன் ” என்று கேட்பவர் அங்கு எவரும் இல்லை. பகல் முழுவதும் பசியைப் பொறுத்துக்கொண்டு தலைவாசலில் காத்திருந்தார் மாலைப் பொழுதில் மாளிகையை வலம் வந்து கடைவாசலை அடைந்தார். தம் தலைவிதியை நொந்து ஒரு தமிழ்ப்பாட்டு இசைத்தார்.

“ முத்தலை சிந்தும் பொருநா

நதித்துறை மூழ்கி எழுந்து அத்தலை நின்று விடாய் ஆறிக்

கல்வி அளைந்து நறுங் கொத்தலர் சண்பகக் காவோடு

நின்று குலாவிய யான் இத்தலை வந்து கடைத்தலை

காத்தல் இளந்தலையே “

“அந்தோ எந்த இடத்தில் இருத்தற்குரிய நான் இந்த இடத்தில் வந்து இடர்ப்படுகின்றேன் பொருனைத் துறையிலே நீராடி, பூஞ்சோலையிலே இளைப்பாறி, புலவர்