பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 ஆற்றங்கரையினிலே

குழாத்திலே திளைத்துப் பழகிய யான் அழைப்பாரும் அடுப்பாரும் இன்றித் தன்னந் தனியனாய்க் கடைத் தலையில் காத்திருக்கின்றேனே இது ஈன மன்றோ?” என்று அக்கவிஞர் கசிந்துருகிப் பாடிய பாட்டு அவ் வழியாக வந்த சேதுபதியின் செவியில் விழுந்தது. உடனே கடைவாயில் திறந்தது. செஞ்சொற் கவி பாடிய பாவநாசப் புலவரைச் சீராக வரவேற்றார் சேது மன்னர்; பிழை பொறுக்குமாறு வேண்டினார்; வரிசையறிந்து பரிசளித்தார். சேதுபதியிடம் விடை பெற்றுப் பாவநாசப் பதியை வந்தடைந்தார் பாவலர்.

இப்பாவலர் மரபிலே தோன்றிய புலவர் பெருமான் சிவஞான முனிவர். பாவநாசத்தைச் சேர்ந்த விக்கிரமசிங்க புரத்திலே பிறந்து, முக்களாலிங்கன் என்னும் பிள்ளைப் பெயர் பெற்ற இவ்வித்தகர், இளமையிலேயே திருவாவடுதுறை மடத்தை அடைந்து துறவு பூண்டார். தென்மொழியும் வடமொழியும் தெள்ளத் தெளிய உணர்ந்தார்; செயற்கரிய தவம் செய்து செம்மையுற்றார்.

“ வடநூற் கடலும்

தென்தமிழ்க் கடலும் முழுதுணர்ந் தருளிய

முனிவரன், துறைசை வாழ்சிவ ஞான மாதவன்”

என்று அவர் புலமைத் திறத்தையும் தவத்தின் சிறப்பையும் தமிழகம் வியந்து புகழ்ந்தது. சைவ சித்தாந்தத்தின் உயிர் நாடியாக விளங்கும் சிவஞான போதம் என்னும் செம்மை சான்ற ஞானநூலுக்குப் பேருரை கண்ட பெரியார் இவரே ! திருக்குறளின் கருத்துகளை நாடறிந்த கதைகளின் வாயிலாக விளக்கிச் சோமேசர் முதுமொழி வெண்பா’ என்னும் பெயரால் அரியதொரு நூல் இயற்றிய கவிஞரும் இவரே !