பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 ஆற்றங்கரையினிலே

திகழ்கின்றன. அவர் வழங்கிய ஞானச் செல்வத்தின் அடியாக எழுந்தது. வைணவ சித்தாந்தம்.

திருமால் அடியாராகிய ஆழ்வார்களுள் தலைமையும் பெருமையும் உடையவராதலால் நம்மாழ்வார் என்ற அருமைத் திருப்பெயர் குருகை மாறனுக்கே உரியதாயிற்று. இத்தகைய பெரியார் பிறந்தருளும் பேறு பெற்றமையால் குருகூரின் புகழ் பெருகிற்று. ஆழ்வார் திருநகரி என்ற பெயர் அதற்கு அமைவதாயிற்று. நெல்லை நாட்டில் பொதியமலைச் சாரலில் எழுந்த ஊர்களில் ஒன்று ஆழ்வார் குறிச்சி என்னும் பெயர் பெற்றுள்ளது. ஆழ்வார் என்னும் சொல் சிறப்பு வகையில் நம்மாழ்வாரையே குறிக்குமாதலால் அவ்வூரும் அவர் பெயர் தாங்கி நிற்பது போலும்.

உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லாம் கண்ணனே என்று ஆர்வமுற்றுப் பாடிய இவ் ஆழ்வார் தமிழறிஞர் களை இறைவனிடம் ஆற்றுப்படுத்தும் முறை அழகிய தாகும். வம்மின் புலவீர் என்று ஆதரித்து அழைத்து அவர்க்கு ஓர் நல்லுரை பகர்கின்றார். தும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ என்று அவர்க்கு வாழும் நெறி காட்டுகின்றார். உழைப்பின் பெருமையை உணர்த்தும் இத் திருவாய்மொழி பொன்னே போல் போற்றத் தக்கதாகும் !

தமிழகத்தின் பொற்கலம் என்று புகழப் பெறுகின்ற சங்க காலத்தில் பொய்யறியாப் புலவர் பலர் வாழ்ந்தனர். வரையாது பொருள் வழங்கி அறிஞரையும் வறிஞரையும் ஆதரித்த பெருஞ் செல்வரும் வாழ்ந்தனர். அவர் கொடைத் திறங்கண்டு இன்புற்ற புலவர்கள் இறவாத தமிழ்க் கவிதையால் அன்னாரைப் புகழ்ந்து போற்றினர். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் உலகம் பாராட்டிய கபிலர் பெருமான் பாரி என்னும் சிற்றரசனை மனமாரப் புகழ்ந்து பாடினார். அவ் வண்ணமே