பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பறை 204

தட்டினார். அங்கங்கே நின்ற பணிப் பெண்கள் அவர் எருத் தட்டுகிறார் என்று எண்ணிக் கூடையை எடுத்து ஓடி வந்தார்கள் அக்காட்சியை நீ காண்பாயோ? “ என்ற கருத்தடங்கிய பாடல் ஒன்று இயம்பினார். எருத் தட்டிய கையிலும் ஏற்ற பரிசளித்து அனுப்பினார் முத்துசாமி

வரிசை யறிந்து அறிஞர்க்குப் பரிசளிக்கும் இயல்பு வாய்த்த அவ்வள்ளல், வருந்தி வந்தவர் எவரையும் வறிதே அனுப்பியதில்லை. இல்லை என்ற சொல் அவரிடம் என்றும் இல்லை.

செப்பறைப் பதியை நோக்கி ஒருநாள் முத்துசாமி வள்ளலும் அழகிய சொக்கநாதக் கவிஞரும் செல்லும் பொழுது, காயும் இலையும் செறிந்து குலுங்கிய ஒரு செழுஞ் சோலை அவர் கண்களைக் கவர்ந்தது. அந் நிலையில் வள்ளல் கவிஞரை அமர்ந்து நோக்கி, ஐய காய் என்று தொடங்கி இலை என்று முடியும்படி ஒரு கவி சொல்லுக’ என்று வேண்டினார். உடனே எழுந்தது ஒரு பாட்டு.

“ காய்சினம்இல் லாதான் கருணைமுத்து சாமிவள்ளல்

வாய்மையுளன் பாடி வருவோர்க்கு - தாய்நிகர்வான்

எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில்

இல்லைஎன்ற சொல்லே இலை” என்ற நல்ல பாட்டைக் கேட்ட வள்ளல் நாணித் தலை கவிழ்ந்தார். இலையும் தழையும், காயும் பழமும் நிறைந்து நின்ற சோலையைக் கவிதையிலே காணலாம் என்று எண்ணியிருந்த வள்ளல் ஏமாற்றமுற்றார். எனினும், பழுத்த பண்புடைய ஒரு பெருமகனைப் பற்றிய பாட்டு தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது. முத்துசாமி வள்ளலின் உள்ளத்தில் செம்மை உண்டு; வெம்மை இல்லை. அவர் வாக்கில் உண்மை உண்டு இல்லை என்ற சொல் இல்லை. அவர்