பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. முக்கூடல்

தென் பாண்டி நாட்டிலே முக்கூடல் என்ற ஊர் ஒன்று உண்டு. வடநாட்டில் உள்ள திரிவேணியைப் போன்று தென்னாட்டில் முக்கூடல் ஒரு சிறந்த தீர்த்தத் துறையாக விளங்கிற்று. பொதிய மலையிலே பிறக்கும் பொருனையாறும், குற்றால மலையிலே பிறக்கும் சிற்றாறும், கழுகு மலையின் அருகே ஒர் ஊற்றினின்றும் எழுந்து ஒடும் ஒடையும் முக்கூடற் பதியிலே கலக்கும் காட்சியைக் கண்டு கவிஞர் பாட்டிசைப்பார் ஆயினர்.

வேனிற் காலம் முடிந்ததும் முக்கூடலில் வேளாண்மை செய்யும் உழவர் வானத்தையே நோக்கி நிற்பர்; கார் மேகம் தவழ்ந்து சென்றால் கைகூப்பித் தொழுவர் மழைக் காற்று வீசினால் மனம் களிப்பர்; பருவமழையை வருவிக்குமாறு கருங்குயிலை வேண்டுவர். இத்தகைய உழவர் மனங்களிக்கப் பருவ மழைக்குரிய அறிகுறிகள் தோன்றும். கோடை மாறி கொண்டல் வந்தது என்று குயில் கூவும்: சுழல் காற்று வீசும் மின்னலின் ஒளி கண்ணைப் பறிக்கும்; வானம்பாடி வட்டமிட்டு ஆடும் கருவானத்தில் இடியேறு முழங்கும். இவ் அறிகுறிகளைக் கண்டு அகமகிழ்ந்து ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி’ என்று ஆடிப் பாடுவர் பயிர்த் தொழில் செய்யும் பள்ளர்.”

உழவர் உள்ளம் களிக்கப் பொதிய மலையிலும் குற்றால மலையிலும் கார்மேகம் கவிந்தது; கனத்த மழை பெய்தது. பெரியாறு என்னும் பொருனை யாற்றிலும்,