பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 ஆற்றங்கரையினிலே

சிற்றாறு என்னும் சித்ரா நதியிலும் புது வெள்ளம் பொங்கி எழுந்தது; கால்களின் வழியாகக் குளத்தில் நிறைந்து வயல்களிற் பாய்ந்தது. காய்ந்து கிடந்த நிலத்தில் பாய்ந்து நிறைந்த தண்ணிரை, முக்கூடலழகரின் கருணை வடிவாகக் கண்டு வணங்கினர் பண்பாடுடைய பள்ளர்.

பண்னை நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்யத் தலைப்பட்டான் வடிவழகக் குடும்பன். சேரிப் பள்ளரோடு சேர்ந்து நாற்றங்காலை நன்றாக உழுதான்; தொளியில் விதையைத் தெளித்தான்; முளைத்த முளைக்குத் தண்ணிர் அடைத்தான்; வயலைச் சுற்றி வேலியிட்டான் வளர்ந்த நாற்று முகம் கண்டான் அளவிலா மகிழ்ச்சி கொண்டான்’

நாற்று வளர்ந்த போது அதைப் பறித்து ஏராலே சீராக்கிய நிலங்களில் நடுகைபோடத் தொடங்கினர் பள்ளியர். பாட்டோடு கலந்து நடந்தது நடுகை. அப் பாட்டிலே காளிங்க நடனம் செய்த கண்ணனைப் பாடினர்; கஞ்சனைக் கொன்று முடித்த அஞ்சன வண்ணனைப் போற்றினர்; வானவர்க்கு அமிழ்துட்டிய வள்ளலை வாழ்த்தினர்; மூவுலகும் ஈரடியால் அளந்த முதல்வனைப் புகழ்ந்தனர். ... -

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர்

கஞ்ச னார்க்கொரு நஞ்சனார் கடையும் அமுதம் உடையும் திரையில்

காட்டி அண்டருக் கூட்டினார் அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர்

அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப் பாடி நாற்று முடியை

அலைத்துக் குலைத்து நடச்செய்தே” என்று வாயாரப் பாடிக் கையார நட்டனர் பள்ளியர்.

நட்ட நாற்றுத் தளிர்த்தது; பசப்பேறித் தழைத்தது: பொதி நீட்டிப் புன்முறுவல் பூத்தது; கதிர் எழுந்து