பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ஆற்றங்கரையினிலே

திருக்கோயிலின் அமைப்பும் அங்கமும் காடவர்கோன் எடுத்த கற்கோயிலில் காணப்படுகின்றன என்று அறிந்தோர் கூறுவர்.

பரமேசுரன் என்னும் பெயருடைய பல்லவ அரசன் கச்சியம்பதியில் திருமாலுக்கு ஒர் ஆலயம் எடுத்தான்; பரமேச்சுர விண்ணகரம் என்று அதற்குப் பெயர் இட்டான். அம் மன்னன் காலத்தில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் பரமேச்சுர விண்ணகரத்தைப்பாடியருளினார். இப்போது வைகுண்டப் பெருமாள் கோயில் என்று அவ்விண்ணகரம் வழங்கப் பெறுகின்றது. இவ்வாறு பல்லவ மன்னர் பல்லாற்றானும் காஞ்சிபுரத்தைப் பேணி வளர்த்தமையா லேயே, “பாரூர், பல்லவன் ஊர், மதிற் காஞ்சி மாநகர்” என்று தேவாரம் பாடிற்று.

பல்லவர் ஊராகிய காஞ்சியம்பதியில் ஒருநாள் போர் முரசம் அதிர்ந்தது. படைவீரர் பல்லாயிரவர் திரண்டு எழுந்தார்கள். போர்க்கோலம் பூண்டு அரண்மனையி னின்றும் புறப்ப்ட்ட்ான் பல்லவ மன்னனாகிய நந்திவர்மன், ஆலயம் எங்கும் ஆசிமணி ஒலித்த்து. “ வெற்றிவேல் நந்தி வாழ்க, நற்றமிழ் நந்தி வெல்க என்று நகர மாந்தர். எழுப்பிய பேரோசை வானத்தைப் பிளந்தது.

கச்சி ஏகம்பத்தின் முன் நின்று மனம் உருகி வணங்கினான் மன்னவன். “இறைவா! கச்சி ஏகம்பா ! மண்ணாசை பிடித்த பாண்டிய மன்னன் காவிரியாற்றைக் கடந்து, தொண்டை நாட்டின் மேலும் படையெடுக்கத் துணிந்தான். நின் அருளால் அவன் செருக்கை அறுப்பேன். காஞ்சியின் புகழைக் காப்பேன்” என்று பணிந்து விடைபெற்றுப் பகைவரை நோக்கிச் சென்றான்.

பல்லவன் சேனைக்கும் பாண்டியன் சேனைக்கும் தெள்ளாறு என்னும் இடத்தில் பெரும்போர் மூண்டது. குருதி ஆறாகப் பெருகிற்று. இறுதியில் பாண்டியன்