பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கூடல் 203 வளைந்து முதிர்ந்தது; நாட்கதிர் நடந்தது; அறுவடை முடிந்தது.

இவ்வாறு அழகர் பண்ணையில் பணி செய்த வடிவழகக் குடும்பனுக்கு வாய்த்த பள்ளியர் இருவர். மூத்தவள் முக்கூடற் பள்ளி. இளையவள் மருதூர்ப் பள்ளி, இருவரும் விண்ணாணம் பேசுவதில் விருப்பம் மிக்கவர். தம் பிறப்பின் மேன்மையை ஓயாது பேசுவர்.’ என் குடும்பம் இன்று நேற்று வந்ததன்று பெரியாறும், சிற்றாறும் கலந்த கால முதல் வழிவழியாக வருவதாகும் என்று முக்கூடற்பள்ளி கூறுவாள். அது கேட்ட இளைய பள்ளி,

“ செஞ்சிக்கும் கூடலுக்கும்

தஞ்சைக்கும் ஆணைசொல்லும் செங்கோல் வடமலேந்திரன்

எங்கள் ஊரே”

என்று தன் குடிப் பெருமை பேசுவாள்.

வடிவழகக் குடும்பனுக்கு மூத்த பள்ளி மாமன் மகள். அந்த முறையில் தன்னை உரிமையுடன் உகந்து மணந்து கொண்டான் என்று எப்பொழுதும் பெருமிதமாகப் பேசுவாள் அப்பள்ளி. இளையாள் அவளுக்கு இளைத்தவளா? மாமன் மகள் ஆனால் என்ன? மற்றொருத்தி ஆனால் என்ன? உழக்கிலே கிழக்கு, மேற்கு என்பதுண்டோ? உன்னைக் கட்டிய பள்ளன் என்னைக் கண்டான், காதல் கொண்டான்; வலிய என் ஊரில் வந்து மணந்தான்; முன்னே வந்தவள், பின்னே வந்தவள் என்று பேசுவதில் ஏதேனும் பொருள் உண்டோ ? என்று மூத்தாளின் வாயடைப்பாள்.”

இப்படியே ஏச்சும் பேச்சும் வளர்ந்துகொண்டே போகும். நெடும் பொழுது வாதாடிய பின் இருவர் வாயும் ஒயும். ஏசலும், பூசலும் இனி வேண்டா, ஈசனார் பாதம்