பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்கை மாநகரம் 22

கண்டாள் அவள் தோழி. ஐயோ! கொற்கைக் கருங்கடலில் விளையும் முத்தைக் காண வந்த எம் காவலன், இக் கன்னியின் கண்ணிர்க் கடலினின்று எழுகின்ற முத்தைத் கண்டானில்லையே! என்று வருந்தினாள்.

“இப்பின்ை றிட்ட எறிகதிர் நித்திலம்

கொற்கையே யல்ல படுவது - கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம், கருதியார் கண்ணும் படும்” என்ற அழகிய பாட்டில் பாண்டியனுக்குரிய கொற்கைக் கடலின் முத்து குறிக்கப்படுகின்றது.

பாண்டி நாட்டின் பெருமையைப் பாரெங்கும் பரப்பிய கொற்கை மாநகரில் வாணிகத்திற்கேற்ற பல சாதனங்களை அமைத்திருந்தான் பாண்டியன். அரசாங்க நாணயம் அடிப்பதற்காக அந்நகரின் அருகே அக்கசாலை ஒன்று நிறுவப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் சென்னை மாநகரில் அமைந்த ‘தங்கசாலை போன்று முற்காலத்தில் கொற்கையம்பதியில் அமைந்தது அக்கசாலை. அச்சாலையைத் தன்னகத்தே உடைய ஊரும் அக்கசாலை என்று பெயர் பெற்றது.

நாளடைவில் கொற்கைத் துறைமுகத்தை விட்டுக் கடல் விலகிப் போயிற்று. பொருனையாற்று நீரில் க்லந்து வந்த மண்ணும், மணலும் துறைமுகத்தைத் துார்த்து விட்டன. அந்நிலையில் கொற்கையில் வாழ்ந்த மக்கள் பிற ஊர்களிற் சென்று குடியேறுவாராயினர். கெட்டால் பட்டணம் செல்க’ என்னும் பழமொழிக்கு ஏற்ப அக்கசாலையில் வாழ்ந்த தட்டார்கள் திருநெல்வேலி நகரில் சென்று தொழில் புரிந்து வாழத் தொடங்கினர். அன்னார் அக்கசாலையை விட்டுப் பெயரும்போது அங்கு நெடுங்காலமாகத் தாம் வழிபட்ட பிள்ளையாரையும் உடன் கொண்டு சென்றார்கள். நெல்லை மாநகரில் அப்பிள்ளை