பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்கை மாநகரம் 244

துணிந்து முன்வந்தார். கால்டுவெல் ஐயரை நோக்கிப் பேசலுற்றார்:

கொற்கையை நாடி வந்த பெரியவரே ! உம்மைக் கண்டு எங்கள் உள்ளம் நடுங்குகின்றது. இவ்வூரிலே பழம் புதையல்கள் பல உண்டு. அவற்றைப் பெயர்த்தெடுக்கும் கருத்தோடு நீங்கள் இங்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது. இந்த ஊர் முன்னொரு காலத்தில் சிறந்த நகரமாக இருந்தது. அப்போது மன்னரும் செல்வரும் இங்கு வாழ்ந்தார்கள். உழைப்பாளராகிய ஏழை மக்கள் கடலுள் மூழ்கி முத்தெடுத்துக் கூலி பெற்றார்கள். அவர்கள் பாடுபட்டுத் தேடிய பணம் இந்த மண்ணிலே புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அப்புதையல்களைப் பெரும் பூதம் ஒன்று காத்து வருகின்றது. நீங்கள் அவற்றைப் பெயர்த் தெடுக்க முற்பட்டால் பூதம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்குமோ? சீற்றம் கொண்டு இவ்வூரையே அடியோடு அழித்து விடும்:

முன்னொருகால் இங்கு நிகழ்ந்த ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன், கேளும் சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை நாட்டில் ஆட்சி புரிந்த வெள்ளையர் ஒருவர் புதையல் எடுப்பதற்காக இவ்வூருக்கு வந்தார். அவர் கருத்தையறிந்த கொற்கைக் குடிகளாகிய நாங்கள் கலக்கம் உற்றோம். பூதம் காக்கும் புதையலின் அருகே போக வேண்டா என்று அவரைப் பணிந்து வேண்டினோம். அவர் எங்களை ஏளனம் செய்வார் போல் ஒரு புன்னகை புரிந்தார். அப்பொழுது அவருடன் இருந்தவருள் ஒருவர் இவ்வூர்வாசிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் தொடங்கினார்:

“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப்

புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடர்காள்

கேளுங்கள் - கூடுவிட்டிங்கு