பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 ஆற்றங்கரையினிலே

ஆவிதான் போயின. பின்பு

ஆரே அநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்’ என்ற பாட்டைச் சொல்லி விட்டு, மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கும் புதையல்களெல்லாம் அரசாங்கத்துக்கே உரியன என்று அழுத்தமாகப் பேசினார். நாங்கள் அஞ்சி விலகினோம்.

வெள்ளை அதிகாரிக்கு ஒரு கூடாரம் அமைக்கப் பட்டது. அங்கிருந்து கொண்டு சில இடங்களைத் தோண்டிப் பார்க்கும்படி அவர் வேலையாள்களை ஏவினார்; நெற்றி வேர்வை நிலத்தில் விழ அவர்கள் பகல் முழுவதும் பாடுபட்டார்கள். கருகருக்கும் வேளையில் புதையல் இருக்குமிடம் ஒன்று தெரிந்தது. அதைத் தொட்டவுடன் வேலையாள்கள் கை சோர்ந்து, மெய் சோர்ந்து, மயக்கமுற்று விழுந்தார்கள். அவர்களை மருத்துவ சாலைக்கு அனுப்பிவிட்டுத் தம் கூடாரத்தில் உறங்கினார் வெள்ளையர். காலையில் கண் விழித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். புதையல் இருந்த இடம் புலப்படவில்லை. நன்றாகக் கண்களைத் துடைத்துப் பார்த்தார். பாளையங் கோட்டையில் தம் வீட்டின் அருகே அக்கூடாரம் நிற்கக் கண்டார். அச்சம் அவருள்ளத்தைப் பற்றிக் கொண்டது. வெளியே சொன்னால் வெட்கம் என்றெண்ணி அன்று முதல் அவர் இவ்வூரருகே வருவது மில்லை; புதையலைப்பற்றி நினைப்பது மில்லை. இது பொய்யன்று; புனைந்துரை. யன்று; முற்றும் உண்மை. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று இந் நாட்டுப் பெரியார் ஒருவர் பாடியுள்ளார். ஆதலால் பூதம் காக்கும் புதையல் அருகே போகாமல் வந்த வழியே நீங்கள் செல்வது நல்லது என்று கூறி முடித்தார் கொற்கைப் பெரியார்.

அவர் சொல்லிய கதையைக் கவனமாய்க் கேட்டார் கால்டுவெல் ஐயர். ஐயோ, நான் புதையல் எடுக்க வர