பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்கை மாநகரம் 216

வில்லையே பொருளாசை எனக்கு இல்லை. முன்னொரு காலத்தில் கொற்கை, கடற்கரையில் இருந்ததாகச் சில குறிப்புகளால் அறிந்தேன். அது உண்மைதானா என்று ஆராய்ந்து அறியும் ஆசையால் இங்கு வந்தேன். காசைக் கவர வந்த மோசக்காரன் என்று இகழாது ஆராய்ச்சியில் ஆசையுற்ற ஒரு மாணவன் என்று நம்பி ஒல்லும் வகையில் எனக்கு உதவி செய்தல் வேண்டும் என்று நயந்து வேண்டினார்.

அவர் உருக்கமாகச் சொல்லிய சொல்லை நம்பினர் கொற்கை வாசிகள், வேலை செய்ய விடையளித்தனர். அப்போது அவர் செய்த ஆராய்ச்சியின் பயனாகக் கொற்கையின் பழம் பெருமை விளங்கிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பாண்டி நாட்டுச் சிறந்த துறைமுகம் கொற்கையே என்பது ஐயந்திரிபறத் துலங்கிற்று.