பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயல் மாநகரம் - 220 குறித்துள்ளார். வேனிற் காலத்திலே முத்துக்குளிக்கும் வேலை தொடங்கும். கடலுள் மூழ்கிப் பழகிய பரதவர், படகுகளில் ஏறிச் செல்வர். முத்துச் சிப்பிகள் விளையும் இடந்தெரிந்து, படகை நிறுத்திப் பணி செய்வர். படகிலே கட்டிய கயிற்றைப் பற்றிக்கொண்டு நீரினுள்ளே இறங்குவர். அகப்பட்ட முத்துச் சிப்பிகளை வாரி எடுத்து இடுப்பிற் கட்டிய பையில் இடுவர். மூச்சு முட்டும் பொழுது கயிற்றை அசைப்பர். படகின்மீது நிற்கும் தோழர்கள் உடனே கயிற்றை இழுத்து அவரைப் படகின்மேல் ஏற்றுவர். எடுத்த சிப்பிகளைப் படகிலே கொட்டிவிட்டு, சிறிது இளைப்பாறி மீண்டும் கடலினுள்ளே இறங்குவர். இவ்வாறு நாள் முழுதும் பணி செய்து முத்துச் சிப்பிகளைக் கடற்கரையில் கொண்டு குவிப்பர். அவற்றைப் பங்கிடும் பொழுது பத்தில் ஒரு பாகம் பாண்டிய மன்னர்க்கு இறைப் பொருளாக வழங்கப்படும். கடலுள் மூழ்கி முத்து எடுக்கும் பரதவரை மீன்கள் கடித்து விழுங்கி விடாமல் அவற்றின் வாயை மந்திரத்தால் கட்டிக் காக்கும் மறையவர்க்கு இருபதில் ஒரு பாகம் மந்திரக் கூலியாகக் கொடுக்கப்படும். எஞ்சிய சிப்பிகள் பாடுபட்டவருக்குரிய பங்காகும் ‘ என்று மார்க்கப் போலோ கூறுகிறார்.

தமிழ் நாட்டு மன்னர் நீதியும் அவர் எழுதிய குறிப்புகளால் நன்கு விளங்குகின்றது. நாட்டைக் காப்பது அரசு அவ்வரசைக் காப்பது நீதி என்பது இந்நாட்டுக் கொள்கை.

“இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்” என்று திட்பமாகக் கூறினார் திருவள்ளுவர். சமன் செய்து சீர்துக்கும் கோல் போல் அமைந்து குற்ற நற்றங்களை

நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தினர் பழங்காலத் தமிழ் மன்னர்கள். நீதி மன்றத்தில் இன்னான் என்றும் இனியான்