பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22? ஆற்றங்கரையினிலே

என்றும் பார்ப்பதில்லை. உடையான் என்றும் இல்லான் என்றும் உணர்வதில்லை. குற்றத்திற்கேற்ற தண்டனையைக் கூசாமல் விதித்தனர் கொற்றவர். இவ்வாறு மன்னர்கள் கடைப்பிடித்து ஒழுகிய நெறிமுறையைக் கண்டு மகிழ்ந்தார் மார்க்கப் போலோ,

கடன் கொண்டவன் கொடுத்தவனிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் பழக்கமொன்று அவர் குறிப்பிலே காணப்படுகின்றது. வாங்கிய கடனை வாக்களித்த நாளில் செலுத்தாவிட்டால் கடனாளியைப் பின் தொடர்ந்து சென்று அவன் நிற்குமிடத்தைச் சுற்றி ஒரு கோடு கீறுவான், கடன் கொடுத்தவன். அக்கோட்டைக் கடந்து கடன் பட்டவன் தப்பி ஒட வழி தேடுவதில்லை; கீறிய கோட்டுக்குள்ளே நின்று கடனைத் தீர்க்க முயல்வான். பணம் கிட்டாதாயின் தக்கார் ஒருவரைக் கடனுக்காகப் பிணைப்படுத்துவான். இப்படிச் செய்யாமல் கீறிய கோட்டைத் தாண்டினால் கடனாளி கொலைத் தண்டனைக்கு உள்ளாவான். அரசன் முதலாக ஆண்டி ஈறாக எல்லோரும் இந்நெறிமுறையில் அடங்கி நின்றனர். நாடாளும் அரசனும் இவ்வழக்கத்திற்குக் கட்டுப்பட்டு நடந்ததைக் கண்கூடாகக் கண்டார் மார்க்கப் போலோ.

அயல் நாட்டு வணிகன் ஒருவனிடம் அரசன் ஒரு சிறு தொகை கடனாகப் பெற்றிருந்தான். அவ் வணிகன், பல முறை கேட்டும் பணம் வரவில்லை. ஒரு நாள் அரண்மனை யினின்று வெளிப்பட்டுக் குதிரைமீது சென்று கொண் டிருந்த அரசனைக் கண்டான் அவ்வணிகன். அவனைப் பின் தொடர்ந்து சென்றான். குதிரை நின்ற வேளை பார்த்து அதைச் சுற்றி ஒரு கோடு கீறினான். அது கண்ட அரசன் அங்கேயே நின்று விட்டான். வணிகனுக்குரிய கடனைத் தீர்த்த பின்னரே அவனிட்ட கோட்டைக் கடந்து மாளிகையை அடைந்தான். இக் காட்சியைக் கண்ட பொது மக்கள் அறம் காக்கும் அரசன் என்று அவனை வாயாரப்