பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டாது 230

அவ்வாற்றின் கரையில் பூதப் பாண்டி என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. அழகிய பாண்டிய புரம் என்ற ஊரும் அதற்கு அருகே உண்டு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நாஞ்சில் நாட்டை ஆண்ட குறுநில மன்னரின் பெரும்ை புறநானூற்றிலே பேசப்படுகின்றது. அன்னவருள் ஒருவன் நாஞ்சில் வள்ளுவன். அவன் ஆட்சியில் அமைந்த நாட்டின் வளமும், அவன் கொடைத்திறமும் ஒளவையார் முதலிய நல்லிசைப் புலவர்களால் பாடப் பெற்றுள்ளன. அவன் சிறந்த வீரனாகவும் விளங்கினான் என்பது அப்புலவர் களின் வாக்கால் புலனாகின்றது.

பழையாறு பாயும் நன்னாட்டில் வரையாது கொடுக்கும் வள்ளல்கள் பலர் அந்நாளில் வாழ்ந்தனர். அவர்களில் தலை சிறந்தவன் ஆய்’ என்னும் அருமையான பெயருடையவன். அவன் வறுமையின் பெரும் பகைவன்; அற்றார்க்கெல்லாம் உற்ற துணைவன் தாயனைய ஆய் என்று தமிழகம் போற்ற வாழ்ந்தவன்.

“இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும்

அறவிலை வணிகன் ஆய்அலன்”

என்று அவன் பண்பாட்டைப் பாராட்டினார் ஒரு பழந்தமிழ்ப் புலவர். உயர்ந்த குறிக்கோள் உடைய அவ்வள்ளல் ஈதல் அறம்’ என்று எண்ணி வறியவர்க்குப் பொருள் வழங்கினாலல்லன். இப் பிறப்பில் ஈதலாகிய அறத்தைச் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனாகிய இன்பம் விளையும் என்று கருதினானில்லை. அற்றார்க்கு ஈதல் பொருள் பெற்றார் கடமை என்பது அவன் கொள்கை. இத்தகைய விழுமிய நோக்கத்துடன் வாழ்ந்த வள்ளலின் பெருமை தமிழ் நாடெங்கும் பரவிற்று. அவனை ஈன்ற நாடு ஆய்நாடு என்றும், அதன் தலைநகர் ஆய்குடி என்றும் பெயர் பெற்றன.