பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 ஆற்றங்கரையினிலே

எடுத்துச் செல்லும் பாசனக் கால்வாய் ‘ புத்தனாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. புத்தனாறாகிய புத்தாறு பிறந்த பின்னர் தாயாறாகிய பறளியாறு பழையாறு என்னும் பெயர் பெற்றது போலும் !

பூதப் பாண்டியில் பழமையான குகைக் கோயில் ஒன்று உண்டு. அங்குள்ள ஈசன் பூதலிங்கம் என்று அழைக்கப் படுகின்றார். அக்கோயில் பூதப்பாண்டியனால் நிறுவப் பெற்றதென்று அவ்வூரார் கூறுவர். -

இவ்வாறு நாஞ்சில் நாட்டில் தன் பெயரையும் புகழையும் நிலை நாட்டிய பூதப்பாண்டியன் இறந்தபோது பெருந் தமிழ் நாடு அருந்துயரில் ஆழ்ந்தது. பாண்டிமாதேவி உடன்கட்டையேறி உயிர் துறக்கத் துணிந்தாள். அவள் கருத்தறிந்த மதுரை மாநகரத்தார் பொறுக்க முடியாத வருத்த முற்றுக் கதறினர். கண்ணிர் பெருக்கினர். அந்நகரில் வாழ்ந்த சான்றோர் பலர் அரண்மனையிற் போந்து அரசியின் கருத்தை மாற்ற முயன்றனர். அப்போது அரசமாதேவி அவர்களை நோக்கி,

“ பல்சான் றிரே பல்சான் ஹீரே

செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் ஹீரே” ‘ உயிர்க்கு உயிராகிய உன் கண்வனுடன் செல்க என்று வழியனுப்பாமல் என்னைத் தடுக்கும் பொல்லாப் பெரியோரே! உமக்கு ஒன்று கூறுவேன். பழஞ் சோறுண்டு பாயில்லாமல் வெறுந்தரையில் படுத்து, கைம்மை நோன்பை மேற்கொண்டு உயிர் வாழும் கடைப்பட்ட மகளிர் இனத்தைச் சேர்ந்தவள் அல்லேன் யான் ! என் கணவனை ஏற்றும் ஈமப் பள்ளி எனக்கு வெம்மை விளைக்கும் நெருப்பன்று தண்மை தரும் தாமரைப் பொய்கையாகும். என்று மறுமொழி கூறித் தீப்பாய்ந்து உயிர் நீத்தாள். பழந் தமிழ்நாட்டுக் கற்புநெறி வழுவாமல் கணவனாருடன் சென்ற தேவியைக் கற்பரசிகளின் வரிசையில் வைத்துத் தமிழகம் போற்றுகின்றது.