பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 - ஆற்றங்கரையினிலே

இவ்வாறு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சீரும் சிறப்பும் உற்று விளங்கிய முசிரியின் பெருமை நாளடைவில் குறைந்தது. முசிரி என்னும் பெயரும் மழுங்கி மறைந்தது. சேரமான் பெருமாள் சேரநாட்டில் அரசு புரிந்தபோது கொடுங்கோளுர் என்னும் துறைமுக நகரம் மலையாள நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது என்பது திருத்தொண்டர் புராணத்தால் விளங்குகின்றது:

கொடுங்கோளுரில் அரசு வீற்றிருந்த சேரமானும் திரு வாரூரில் சிவத்தொண்டு புரிந்த சுந்தர மூர்த்தியும் ஒருவரை ஒருவர் கண்டு பழகுவதற்கு முன்னமே உணர்ச்சியால் ஒன்றுபட்டு உயரிய தோழராயினர். சேரநாட்டிலே பிறந்தவர் சேரமான்; நடுநாட்டிலே பிறந்தவர் சுந்தரர். அரசாளும் குலத்தைச் சேர்ந்தவர் சேரமான்; அந்தணர் குலத்தில் வந்தவர் சுந்தரர். நாடாளும் பணியை மேற் கொண்டவர் சேரமான், ஈசனைப் பாடும் பணியே பணியாகக் கொண்டவர் சுந்தரர். இங்ஙனம் பல்லாற்றானும் வேறுபட்ட சேரமானும் சுந்தரமூர்த்தியும் சிவனடி மறவாச் செம்மை வாய்ந்தவர் ஆதலின் சிறந்த நண்பராயினர்.

தம் உயிர்த்தோழராகிய சுந்தரரைக் காணும் ஆசை யால் மலைநாட்டினின்றும் புறப்பட்டுத் திருவாரூருக்கு எழுந்தருளினார் சேரமான்; கந்தரரோடு அளவளாவினார். அவர் பாடிய தமிழ்ப் பாட்டைக் கேட்டு மனம் உருகினார். எல்லையற்ற பெருமை வாய்ந்த தில்லை அம்பலத்தை அவரோடு சென்று வணங்கினார்; இன்ப வெள்ளத்தில் மூழ்கினார். பொன் வண்ணத்து அந்தாதி என்னும் செந்தமிழ்ப் பாமாலை சாத்தினார். ஐந்தொழில் புரியும் ஆடலரசை அகனமர்ந்து ஏத்தினார்.

மனம் ஒத்த நண்பர் இருவரும் திருஆலவாய் முதலாய தென்னாட்டுத் திருப்பதிகளைக் கண்களிப்பக் கண்டு வணங்கிச் சேரநாட்டுத் தலைநகரை நண்ணினர். சிவநேயச்