பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 - ஆற்றங்கரையினிலே

கன்னியர். அது கண்டு ஓடிவந்து பெண்களை அதட்டி மீண்டும் வீட்டின் உள்ளே அடைத்துத் தாழிட்டனர் தாய்மார். இவ்வாறு அன்னையர் அடைத்தலாலும் கன்னியர் திறத்தலாலும் கதவின் குடுமி தேய்ந்து போயிற்று என்று பாடுகின்றார் ஒரு கவிஞர்.

“ தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்

தேயத் திரிந்த குடுமியவே ஆய்மலர் வண்டுலாம் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாம் வீதிக் கதவு” என்ற பாட்டில் கோதையின் வருகையால் தேய்ந்த குடுமியைக் காணலாம்.

தேவாரப் பாடல் பெற்ற திருவஞ்சைக் களம் இப்பொழுது திருவஞ்சிக்குளம் என்று மலையாள மொழியில் மருவி வழங்குகின்றது. சேரநாட்டில் பழைய தலைநகராகிய வஞ்சி மாநகரம் இத் திருவஞ்சிக்குளமே என்பர் சிலர். சேரமான் அரசு புரிந்த கொடுங்கோளூர் மேலைநாட்டார் நாவில் கிராங்கனூர் எனச் சிதைந்தது. சங்க நூல்களில் முசிரி என்றும், தேவாரத்தில் மகோதை என்றும் பெயர் பெற்று விளங்கிய திரு நகரம் இப்போது ஏற்றமும் தோற்றமும் இழந்து கேரள நாட்டுக் கடற் கரையில் உறங்குகின்றது.