பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி 246

புனிதர் போற்றும் பெருநதியே ! உன் புண்ணியத் துறைகளில் அமர்ந்து, அருந்தவம் முயன்று இன்பப் பேறு பெற்றவர் எண்ணிறந்தவர். மாதவத்தின் ஆற்றலால் விதியையும் வென்று உயர்ந்த மார்க்கண்டனுக்கு அருள்புரிந்த மணிகர்ணிகைத் துறையை இன்று கண்களிப்பக் கண்டேன்; மனம் குளிர்ந்து வணங்கினேன்.

“ கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு ” என்ற அருமைத் திருக்குறளில் மாதவ முனிவனாகிய மார்க்

கண்டனை அன்றோ மனத்திற் கொண்டு பாடினார் தமிழ்

மறை யருளிய திருவள்ளுவர்?

வித்தகர் போற்றும் விழுமிய நதியே : மன்னன் அரிச் சந்திரன் காவுல் புரிந்த மயானத்தைக் கண்டேன். மனம் உருகி தின்றேன். வாய்மை தவறாத அம்மன்னவன் கடுமையான சோதனையைத் தன் சாதனையால் வென்ற வரலாற்றை அறியாதார் பாரத நாட்டில் உளரோ? பதி இழந்தேன், பாலனை இழந்தேன், நிதி இழந்தேன், இன்னும் எதை இழந்தாலும் சொன்ன சொல்லை இழக்கமாட்டேன்’ என்று அவ்வாய்மையாளன் கூறிய கட்டுரையைக் கேளாத செவி என்ன செவியே !

மாசகற்றும் காசி மாநகரே ! உன் பெயர் வாசியை அறிந்து போற்றுகின்ற நாடுகளுள் தலை சிறந்தது எங்கள் தமிழ்நாடு. தென்காசி என்ற ஊரும், சிவகாசி என்ற ஊரும் தென்னாட்டிலே உண்டு விசாலாட்சியின் அருள் இங்கு விளங்குதல் போலவே மீனாட்சியின் அருள் தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் விளங்குகின்றது. வாரணாசி என்று உன்னை அழைப்பதன் காரணத்தை இங்கு வந்த பின்னரே அறிந்தேன். கங்கையில் வந்து சேரும் வாரனை என்ற ஆற்றுக்கும் அசி என்ற ஆற்றுக்கும் இடையே முன்னாளில் அமைந்த காசி, வாரணாசி என்று பெயர் பெற்றது என்று