பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 ஆற்றங்கரையினிலே

அறிந்தோர் சொல்லக் கேட்டேன். வாரணாசி என்னும் பெயரே திரிந்து பனாரஸ் ஆயிற்று என்று அன்னார் சொல்லியபொழுது சிறிது திகைத்தேன்; வடநாட்டார் நாவில் வகரம் திட்டவட்டமாக வழங்குவதில்லை என்பதை வழி நடந்து வரும்போது ஒருவாறு உணர்ந்தேன். கன்னட நாட்டில் வசவன் பசவன் ஆகின்றான். வங்க நாட்டில் வங்காளம் பெங்கால் ஆகின்றது. அந்த முறையில் வாரனாசி என்ற சொல் பாரனாசியாக மருவி பனாரஸ்: எனச் சிதைந்தது என்பதை அறிந்துகொண்டேன். எனினும் பழந்தமிழ்க் கவிதையில் வாரணாசி என்ற பெயர் அழகாக வழங்குவதறிந்து அகமகிழ்கின்றேன்.

பிறவிப் பிணி தீர்க்கும் பெருநகரே தென்னாட்டு அறவோரும், அறிஞரும் உன்னை நாடி வருகின்றார்கள். பலநாள் இங்கே தங்கிப் புண்ணியத் துறைகளில் நீராடி அகிலேசரை வணங்க ஆசைப்படுகின்றார்கள். ஆயினும் கடும்பனியால் நலிந்து, கடு வெயிலால் உலர்ந்து அன்னார் வாடி வருந்துகின்றார்களே ! அவர்கள் தங்குவதற்கு இடமும் இல்லை மடமும் இல்லை. வடநாடு முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆளுகின்ற மகம்மதிய மன்னர்க்கு இவர்கள் படும்பாடு தெரியுமோ தெரியாதோ? அம்மன்னனிடம் சென்று இக் குறையை முறையிடக் கருதியுள்ளேன். தமியேன் வாசி பெறுதற்கு நீ வரம் தரல் வேண்டும் என்று கைகூப்பித் தொழுது விடை பெற்றார்.

மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது முனிவர் மகம்மதிய மன்னர் மொழியை மாசறக் கற்றார். அம் மொழியைச் செம்மையாகப் பேசுவதற்கேற்ற நாவன்மை பெறுமாறு சகல கலாவல்லியாகிய கலைமகளின் அருளை நாடினார்.

“ மண்கண்ட வெண்குடைக் கீழாக

மேற்பட்ட மன்னரும்என்