பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சென்னை மாநகரம்

தமிழ் அன்னையின் திருமுகம் எனத் திகழ்வது சென்னை மாநகரம். அந்நகரின் கடற்கரையிலே அலைகள் அயராமல் இசை பாடும்; கானலஞ் சோலையிலே கலாப மயில் ஆர்த்து ஆடும். இவ்வாறு மயில் ஆர்க்கும் பாக்கமே மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது.

முதல் ஆழ்வார்களில் ஒருவர் அவ்வூரில்ே தோன்றினார். “ திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று திருமாலின் வண்ணத்தை அழகொழுக எழுதிக் காட்டினார். அவ் ஆழ்வார் பிறந்ததனால் பெருமையுற்ற மயிலையம்பதியை மனமார வாழ்த்தினார் ஒரு கவிஞர்.

திருக்கண்டேன். எனும் நூறும்

செப்பினான் வாழியே மருக்கமழும். மயிலைநகர்

வாழவந்தேன் வாழியே “

என்பது அவர் திருவாக்கு.

தன்னிகரில்லாத் தமிழ்ப் புலவராகிய திருவள்ளுவரும் மயிலையிலே பிறந்தவர் என்பர். தொன்று தொட்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் என்று போற்றப்படும் அப்புலவர் பெருமானுக்கு மயிலையில் ஒரு திருக்கோயில்

உண்டு.

பல்லவ மன்னர் காஞ்சியம்பதியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட காலத்தில் மயிலை ஒரு