பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 ஆற்றங்கரையினிலே

காதலன் ஆகும் என்று

கருணையின் மலர்ந்த கண்ணன் யாதினும் இனிய நண்ப

இருத்திஈண்டு எம்மொடு என்றான்” கருணை நிறைந்த கண்களால் குகனைப் பார்த்து, யாதினும் இனிய நண்பா ! எம்மொடு நீயும் இரு என்று இன்னுரை கூறினான்.

அவ்வுரை கேட்ட குகன் ஆனந்த வாரியில் மூழ்கினான்; அரை குறை அன்பினரையும் ஆட்கொண் டருளும் அண்ணலின் அடியிணை பணிந்தான்; வேடப் பெரும்படையைக் கூவி அழைத்தான். தவச் சாலையைச் சுற்றி நின்று காவல் புரியக் கட்டளை இட்டான்.

அப்போது இலக்குவன் விரித்த நாணற் புல்லின்மீது பள்ளிகொண்டனர் இராமனும் சீதையும். வில்லேந்திய கையனாய் விடியும் அளவும் கண்ணயராமல் இருவரையும் காத்து நின்றான் இலக்குவன். புல்லிலே படுத்திருந்த தன்னிகளில்லாத் தலைவனையும், தன் நலம் மறுத்து நின்ற தம்பியையும் மாறி மாறிப் பார்த்து மனம் உருகிக் கண்ணிர் சொரிந்தான் குகன்.

பொழுது புலர்ந்தது; கங்கையைக் கடப்பதற்கு ஆயத்த மானான் கமலக் கண்ணன். அப்போது குகன் அவன் அடி பணிந்து, ஐயனே ! அண்மையிலே உள்ளது அடியேன் இருப்பிடம். அங்கே தேனும், தினையும் உண்டு; மெல்லிய தோலாடை உண்டு; ஏவல் புரிய வேடர் பலர் உண்டு. ஒரு நாளேனும் நீங்கள் மூவரும் அங்கே தங்கி அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் செய்தான்.

அது கேட்ட இராமன், அன்பனே ! இன்னும் சில காலம் புனித மாதவரோடு உறவாடி, புண்ணியத்

துறைகளாடித் திரும்பி வரும்பொழுது அங்கு வருவோம்’ என்று வாக்களித்தான். குகனுடைய உள்ளம் குளிர்ந்தது.'