பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைத்துறை 254

உடன்ே ஒடத்தை வரவழைத்தான். மூவரும் முறையாக ஏறிய பின்பு அவ் வோடத்தைத் தானே ஆனந்தமாகச் செலுத்தினான்.

இவ்வாறு கங்கை யாற்றைக் கடந்த பின்னர், சித்திர கூடத்திற்கு வழி எது?’ என்று வினவினான் இராமன். ஐயனே அவ்விடத்திற்கு வழிகாட்டிக்கொண்டு அடியேனும் உம்மோடு வருவேன்; பாதை செய்வேன்; பர்னசாலை கட்டுவேன்; பாதுகாத்து நிற்பேன் என்று பணிவுடன் கூறினான் குகன்.

கங்கை வேடனது கங்கு கரையற்ற அன்பு இராமன் உள்ளத்தைக் கவர்ந்தது. அகமும் முகமும் மலர்ந்து அன்பனை நோக்கி, ‘ என் ஆருயிர் அனையாய் நீ என் தம்பி உன் தம்பி; என் மனையாள் உன் தோழி என்று இணையற்ற மொழி பகர்ந்தான்.இராமன்.

குலத்தாலும் நலத்தாலும் வேறுபட்ட குகனைத் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொண்ட தலைவனது பெருங் கருணையை நினைந்து உருகினாள் சீதை’ ‘ ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது கங்கை வேடனைச் சரிநிகர் சமானமாகக் கருதிய அரும் பெருங் கருணையை வியந்து,

“ஆழி வண்ணநின் அடியினை அடைந்தேன் அணிபொழில் திருஅரங்கத்து அம்மானே” என்று பாடினார் திருமங்கை ஆழ்வார். கைம்மாறு கருதாப் பேரன்பின் பயனாக யாரும் பெறாத பேறு பெற்ற கங்கை வேடனைக் குகப் பெருமாள் என்று வைணவ உலகம் போற்றி வழிபடுகின்றது. .