பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 ஆற்றங்கரையினிலே

சிறப்புப் பெயருக்கு ஏற்ற முறையில் சோழ நாட்டிலும் ஈழநாட்டிலும் இராசராசேச்சரங்கள் பல எழுந்தன.

இராசராசன் கடல் சூழ்ந்த இலங்கைக்கும் காவலன் ஆயினான். சோழநாட்டில் தஞ்சைன்யத் தலைநகரமாக்கிய வண்ணமே ஈழநாட்டில் பொலனருவையைத் தலைநகரம் ஆக்கினான். அப் புது நகரில் ஒர் அழகிய கற்கோயில் எடுத்தான். தாயிற் சிறந்த கோவில் இல்லை என்ற தமிழ் நாட்டுப் பழமொழியின் வழி நின்ற தன் அருமைத் தாயாகிய வானவன்மாதேவியின் பெயரை அவ்வாலயத் திற்கு வழங்கினான். வானவன்மாதேவீச்சரம் என்பது அத் திருக்கோயிலின் பெயர். சிவ தேவாலயம் என்னும் பெயரோடு அக்கோயி இன்றும் இலங்கையில் காட்சியளிக்கின்றது. அதன் கட்டுக் கோப்பும் சிற்பட பணியும் தமிழகத்தின் கலை வளத்திற்குச் சிறந்த சான்றாகும்.

இலங்கையிற் பாடல் பெற்ற ஈசன் திருக்கோயில் இரண்டும் சிதைந்தும் அழிந்தும் சீரிழந்து நிற்கின்றன மாதோட்டத்தின் பழம் பெருமை மழுங்கிவிட்டது. திருக் கோணமலை பொதுமக்களால் திருக்கணாமலை என்று திரித்து வழங்கப்படுகின்றது. மேலை நாட்டு மொழிகளில் டிரிங்காமலி என்று குறிக்கப்படும் மலை அதுவே முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே அங்கிருந்த பழமையான திருக்கோயிலை இடித்துப் பாழாக்கினர் பரங்கியர் என்னும் போர்சுக்கீசியர். அம்மலையிற் புதைந்து கிடந்த மூன்று அழகிய திருவடிவங்கள் இப்பொழுது கண்டு எடுக்கப் பட்டுள்ளன. இலங்கை மக்களின் ஆர்வத்தால் திருக்கோண மலையில் ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டிருக்கின்றது

மாதோட்டத்தில் உள்ள மண்மேட்டை அகழ்ந்து பார்த்து ஆராய்ந்தால் பழைய கேதீச்சரத்தையும்