பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை மாநகரம் 24

சிறந்த துறைமுகமா யிருந்தது. நந்திவர்மன் என்னும் பல்லவர் கோமானை மல்லை வேந்தன், மயிலை காவலன்”

என்று பாடிற்று நந்திக் கலம்பகம்.

அங்குள்ள பழமையான சிவாலயத்தைக் “ கானமர் சோலைக் கபாலீச்சரம்” என்று புகழ்ந்து போற்றினார் திருஞான சம்பந்தர்; பூம்பாவைப் பாட்டிசைத்தார்.

மயிலைக் கடற்கரையின் அழகுக்கு அழகு செய்தது ஒர் அல்லிக் குளம். மண்ணிரும் ஆகாத முந்நீரின் அருகே நல்ல தண்ணtர் உதவி நின்ற அம்மணற் கேணியை அல்லிக்கேணி என்று மயிலையார் அழைத்தார்கள். அதைச் சுற்றி எழுந்தது ஒரு சிற்றுார். தொண்டை நாட்டு மன்னன் அதன் அண்டையில் திருமாலுக்கு ஒரு கோயில் எடுத்தான். அவர் அருளால் ஊர் சீராயிற்று; அல்லிக்கேணி திருவல்லிக்கேணி யாயிற்று. அல்லிக்கேணியின் அருகே அமைந்த திருக்கோயிலில் கடற் காற்றின் ககத்தை நுகர்ந்து கண்வளர்ந்த இறைவனை மனங் கசிந்து பாடினார் திருமழிசையாழ்வார்.

திருவல்லிக்கேணியின் செழுஞ் சோலையும், நறும் பொய்கையும், சிறந்த மாடமும், உயர்ந்த கோயிலும் திருமங்கை,மன்னன் உள்ளத்தைக் கவர்ந்தன. அவர் பாடிய தெள்ளிய தமிழ்ப் பாட்டில் பஞ்சவர்க்காகத் தூது சென்ற பரந்தாமன் பெருமை பேசப்படுகின்றது. கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துக் கொடுமழை தடுத்த கொற்றவன் பெருமை கூறப்படுகின்றது. செருக்குற்ற இரணியனைச் சீறிச் சிதைத்த சிங்கத்தின் செம்மையும் சொல்லப்படுகின்றது.

“ பிள்ளையைச் சீறி வெகுண்டுதுண் புடைப்ப பிறை எயிற் றனல் விழி பேழ்வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே"