பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காமம் 260

தமிழ் நாட்டார் கொள்கையாதலின் கதிர்காம மலையும் அவர்க்கு உரியதாயிற்று. மெய்யடியார் மனத்தில் விளையாடும் முருகன் - கோலமா மயில்மீது குலாவும் குமரன் கதிர்காம மலையில் காட்சி தரும் கோலத்தை அருமையாகப் பாடியருளினார் அருணகிரியார்:

மலையினின்றும் மாணிக்க கங்கை அருவியாக இழிந்து பரந்து பாயும் இடம் இப்போது செல்லக் (செல்வக்) கதிர்காமம் என்று வழங்கப் பெறுகின்றது. பழைய கதிர்காமம் என்றும், சுவாமி மலை என்றும் அதனைச் சொல்வதுண்டு. -

‘மணியாற்றின் கரையில் அமர்ந்த முருகனும் மாணிக்க வடிவத்தில் விளங்கினான் என்பர். அக் காட்சியை மனக் கண்ணால் கண்டு மகிழ்ந்த அருணகிரியார், மயில் ஏறி விளையாடும் முருகனே : அயராத அன்பர்க்கு அருகனே ! கதிர்காமம் மேவிய கடவுளே ! இதமொழி பகரினும், மத மொழி பகரினும் இவ் ஏழைக்கு இரங்கி வரவேணும் என்று வேண்டுகின்றார்: -

கதிர்காமத்தை நினைத்துக் கசிந்துருகும் அடியார்கள் கருவினை அறுவர் முருகருள் பெறுவர். காட்டு வழிச் சென்றாலும் அவர்க்குக் கள்வர் பயமில்லை; இருளிலே நடந்தாலும் மிருக பயமில்லை. விலங்குகளும் வெம்மை அடங்கிச் செம்மையுற்று வாழும். அம்மலையில் அரியும் கரியும் அளவளாவித் திரியும்; மானும் புலியும் மருவி விளையாடும் கரடியும் மரையும் கலந்து களிக்கும் மயிலும் பாம்பும் மகிழ்ந்து விருந்தருந்தும்’

இத்தகைய இனிய சூழ்நிலையில் அமர்ந்த முருகனைக் குறிஞ்சி நிலக் குடிகளாகிய வேடர் ஆதியில் வழிபட்டனர்.

“ வணமுறை வேடன்

அருளிய பூசை

மகிழ்கதிர் காமம் - உடையோனே"