பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ ஆற்றங்கரையினிலே

என்று அன்னார் வழிபாட்டை விரும்பி ஏற்றுக்கொண்ட முருகன் பெருமையைத் திருப்புகழ் பாடிற்று.

கதிர்காமக் கோயில் சிறிது; ஆயினும் அதன் கீர்த்தி பெரிது. முன்னொருகால் வடநாட்டு மன்னன் ஒருவன் கதிர்காம வேலனைக் கண்டு வணங்கினான்; மகப் பேறில்லாத குறையை அப்பெருமானிடம் முறையிட்டான். அறுவர் பயந்த ஆறமர் செல்வா! மலைமகள் மகனே! தின் திருவருளை நாடி வந்தடைந்தேன் ! உன்னை யொழிய ஒருவரையும் அறிகிலேன் கருத்தறிந்து முடிக்கும் கதிரேசா : நின் கருணையினால் எனக்கு மகப்பேறு கிடைக்குமாயின் அக்குழந்தையை உனக்கே அர்ப்பணம் செய்வேன்’ என்று வாக்களித்தான். நம்பிக்கையோடு தன் நாட்டுக்குத் திரும்பினான்.

கதிரேசன் அருளால் ஒரு பெண் மகவைப் பெற்றான் அம் மன்னன், அதனைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தான்; மழலைச் சொற்கேட்டு மகிழ்ந்தான். அவன் மனக்குறை தீர்ந்தது. நலமெலாம் ஒருங்கே பெற்ற அந்நங்கையைச் சில தோழியரோடு கதிர்காமத்திற்கு அனுப்பினான். தந்தையின் ஆணைப்படி கந்தன் கோயிலில் திருப்பணி செய்து வந்தாள் அம்மங்கை,

“எங்கை உனக்கல்லாது

எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம்கண்

மற்றொன்றும் காணற்க” என்று தோழியரோடு நாள்தோறும் கதிரேசனைத் தொழு தாள். கோயிலின் அருகே அமைந்த ஒரு திருமடத்தில் இருந்துகொண்டு பணி செய்தனர் அப்பாவையர்.

இவ்வாறிருக்கையில், ஒரு நாள் கண்டியரசனாகிய விக்கிரம ராச சிங்கன் கதிர்காம வேலனை வழிபட வந்தான்; பூமாலை புனைந்து கொண்டிருந்த பூவையைக்