பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 276

89 : 3. “தந்தை தாயும்நீ

என்உயிர்த் துணையும்நீ

சஞ்சலம் அதுதீர்க்க வந்த தேசிக -

வடிவும்நீ உனையலால்

மற்றொரு துணைகாணேன் அந்தம் ஆதியும்

அளப்பரும் சோதியே

ஆதியே அடியார்தம் சிந்தை மேவிய

தாயுமா னவன்எனும்

சிரகிரிப் பெருமானே.”

- தாயுமானவர்.

13. திருவரங்கம் 93 : 1. “ மெய்யில் வாழ்க்கையை

மெய்யெனக் கொள்ளும்.இவ் வையம் தன்னொடும்

கூடுவ தில்லை, யான் ஐயனே, அரங்கா, என்று அழைக் கின்றேன் மையல்கொண் டொழிந்தேன்

என்தன் மாலுக்கே.”

- குலசேகர ஆழ்வார்.

96 , 2. “ மென்னடை அன்னம் பரந்துவிளை யாடும்

வில்லிபுத் துர்உறை வான்தன்

பொன்னடி காண்பதோர் ஆசையி னால்என்

பொருகயற் கண்ணிணை துஞ்சா

இன்னடி சிலொடு பாலமு தூட்டி

எடுத்தஎன் கோலக் கிளியை

உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே

உலகளந் தான்வரக் கூவாய்.”

- ஆண்டாள்.