பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 284

ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி

இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.”

- திருநாவுக்கரசர் தேவாரம்.

122 : 4. “ஆண்டாய்உனைக் காண்பதோர்

அருள்எனக்கு அருளுதியேல்

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே.”

- திருமங்கை ஆழ்வார். 21. குரங்காடுதுறை

123 : 1. “கோலமா மலரொடு தூபமும்

சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்.”

- திருஞானசம்பந்தர் தேவாரம்.

126 : 2. “ மின்ஒளிர் முடியாய் வென்றவர் தோற்பர்

தோற்றவர் வெல்வர் வெஞ்செருவில்

என்னொடும் பொருவான் இச்சைஉண் டாயின்

இராவணா பொருதி, ஈண்டு என்ன,

கல்நெடும் தோளாய் ! கலங்கினன் வாலால்

கட்டுண்டு பட்டது கிடக்க

இன்னமும் பொரவோ? இனிச்செரு அமையும்

இன்றுநின் தோழன்நான் என்றான்.”

- இராமாயணம், உத்தரகாண்டம்.

129 : 3. “இந்திரன் செம்மல், பண்டோர்

இராவணன் என்பான் தன்னைச்

சுந்தரத் தோள்க ளோடும்

வாலிடைத் தூங்கச் சுற்றி

சிந்துரக் கிரிகள் தாவித்

திரிந்தவன், தேவர் உண்ண

மந்தர கிரியால் வேலை

கலக்கினான் மைந்தன் என்றான்.”

- கம்பராமாயணம்.