பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஆற்றங்கரையினிலே

தேவாரப் பாடல் பெற்ற திருஒற்றியூரைச் சிவலோக மாகவே கண்டார் பட்டினத்து அடிகள். இத்தகைய ‘செம்மை வாய்ந்த திருஒற்றியூரில் தன் பெயரை நிலைநிறுத்த விரும்பினான் ஒரு வெள்ளைக் கவர்னர், மூன்று ஆண்டுகள் அவன் சென்னைக் கவர்னராகப் பணி செய்தான். காலட் என்பது அவன் பெயர். பேராசை பிடித்த அப்பெரு மகன் திருஒற்றியூரின் ஒரு பால் சென்னைச் சாலியர்களைக் குடியேற்றினான் கோயிலும் கேணியும் அமைத்தான் அக் குடியிருப்பைக் காலட் பேட்டை என்று அழைத்தான். அப் பெயர் பொது மக்கள் நாவில் காலாட்டுப் பேட்டை என்று சிதைந்தது; பின்பு காலாடிப் பேட்டை எனத் திரிந்தது. காலட்டைக் காலாடியாக்கிப் பேராசை கொண்ட பிற நாட்டவர்க்கு நல்லதொரு பாடம் கற்பித்தனர் ஒற்றியூர் மக்கள்.

இவ்வாறு சீரழிந்த இன்னொரு பெயரும் சென்னையிலே உண்டு. திருமயிலையைச் சார்ந்த வாராவதியொன்று ஹாமில்டன் என்னும் வெள்ளையர் பெயரைப் பெற்றது. மொழிக்கு முதலாக மூச்சொலி நிலைக்காது என்னும் தமிழின் நீர்மையை அவி வெள்ளையர் உணர்ந்தாரில்லை. பேச்சு வழக்கில் ஹாமில்டன் வாராவதி ஆமிட்டன் வாராவதி ஆயிற்று: ஆமிட்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி எனத் திரிந்தது. அது ஆங்கிலத்தில் பார்பர்ஸ் பிரிட்ஜ் என்று மொழி பெயர்க்கப்பட்டு இன்றும் சென்னை மாநகரில் வழங்கி வருகின்றது. தமிழின் நீர்மை யறியாது பெயரிடுதல் தவறு என்பதைக் காலாடிப் பேட்டையும், அம்பட்டன் வாராவதியும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன.

சென்னை மாநகரின் அழகுக்கு அழகு செய்வது அதன் கடற்கரைக் காட்சி. மாநிலம் சுற்றிய மாந்தர் எல்லாம்