பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

  1. 65 :

$69 :

17;

4.

3.

292

“ தேன்.ஒங்கு சோலைத் திருவேங் கடம்என்றும்

வான்.ஒங்கு சோல்ை மலைஎன்றும் - தான்.ஒங்கு தென்அரங்கம் என்றும் திருஅத்தி யூர்என்றும் சொன்னவர்க்கும் உண்டோ துயர்?

- பெருந்தேவனார்.

30. பாவைப் பாட்டு

“மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.” (போய - முன் செய்து கழிந்த புகுதருவான் நின்றனவும் - இனி வர இருக்கும் தீவினைகளும், தூசு - பஞ்சு)

- திருப்பாவை.

“ முன்னைப் பழம்பொருட்கும்

முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும்

பேர்த்தும்அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப்

பெற்றஉன் சீரடியோம் உன்அடியார் தாள்பணிவோம்

ஆங்கவர்க்கே பாங்காவோம்: (பேர்த்தும் மீண்டும் பெற்றி - தன்மை, பங்கு - உரிமை)

- திருவாசகம்.

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் பேர்துவீர் போதுமினோ நேர்இழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!”

- திருப்பாவை.