பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருக்காளத்தி

தமிழகத்தின் கண்ணெனத் திகழ்வது திருக்காளத்தி மலை. அம் மலையிலே பொன் முகலியாறு புனிதமாய்த் தவழும் கல் அதிர ஓடிக் கருமந்தி விளையாடும். இத்தகைய செம்மையான மலையை நோக்கி முன்னொருகால் நடந்தார் திருநாவுக்கரசர். முகலியாற்றில் முறையாக நீராடினார்; தூய வெண்ணிறு துதைந்த மேனியராய் மலையின்மீது மெல்ல அடி வைத்து ஏறினார். “ திண்ணன் என்னும் திருத்தொண்டனது கண்ணைக் கவர்ந்த அண்ணலார் அமர்ந்தருளும் அரும்பெருமலை இது வின்றோ “ என்று எண்ணி எண்ணிக் கண்ணிர் வடித்தார். தென் கயிலாசம் என்று நன்மக்கள் போற்றும் காளத்தி மலையில் அமர்ந்தருளும் இறைவுனை,

“கனத்தகத்தான் கயிலாயத் துச்சியுள்ளன் காளத்தியான் அவன்என் கண்ணுளானே.”

என்று பண்ணார்ந்த பாட்டிசைத்துப் போற்றினார்.

இவ்வாறு காளத்திநாதற்குப் பாமாலை யணிந்த திருநாவுக்கரசர், திண்ணிய அன்பு வாய்ந்த கண்ணப்பரின் திருவுருவத்தை அம் மலையிலே கண்டார். வில்லை ஊன்றிய கோலத்தில் நின்ற அவ் வேடர்பெருமான் அடிகளில் வீழ்ந்தார்; எழுந்தார்; கண்ணிர் பொழிந்தார்; “விண்ணுலகும் மண்ணுலகும் வியந்து போற்றும் விமலனே இறவாத பேரன்பின் எல்லை கண்ட