பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காளத்தி 32

எஞ்சி நின்ற ஒன்றையும் இடந்து அப்பத் துணிந்து அம்பின் முனையைக் கண்ணில் ஊன்றினான். அது கண்டு தரியாத ஆண்டவன் திண்ணன் கையைப் பற்றி” நில்லு கண்ணப்ப” என்று திருவாய் மலர்ந்து பேரின்ப நிலையளித்தார் என்பது வரலாறு.

அன்று முதல் காளத்தி மலைக்குச் சென்றோர் எல்லாம் கண்ணப்பனது செயற்கரிய செய்கையை நினைந்து கண்ணிர் பெருக்கினர். சிவநெறியின் புண்ணியக் கண் என விளங்கிய திருஞானசம்பந்தர் திருக்காளத்தி நாதனை வழிபடச் சென்ற போது கண்ணப்பன் பெருமையை எண்ணிக் கசிந்துருகிப் பாடினார்.

“வாய்கலச மாகவழி பாடுசெயும்

வேடன்மல ராகுநயனம் காய்கணையி னால்இடந்து ஈசனடி கூடுகா ளத்திமலையே.”

என்னும் திருப்பாட்டில், வாயாலே தூய நீராட்டி, கண் மலரால் வழிபட்ட கண்ணப்பன் பெருமை பேசப் படுகின்றது.

திருவாசகம் அருளிய மணிவாசகரும் காளத்தி மலையைத் திசைநோக்கித் தொழுதார்; “கண்ணப்பனுக்கு நிகரான அன்பன் ஒருவன் முன்னும் இல்லை, பின்னும் இல்லை. அன்பின் எல்லை. கண்ட திருத்தொண்டன் கண்ணப்பன்” என்று வாயாரப் போற்றினார்.

“ கண்ணப்பன் ஒப்பதோர்

அன்பின்மை கண்டபின்

என்அப்பன் என்ஒப்பில்

என்னையும்.ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை

வாஎன்ற வான்கருணைச்

சுண்ணப்பொன் நீற்றற்கே

சென்றுஊதாய் கோத்தும்பி"