பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடம் 38

அப் பதியில் செஞ்சடைப் பெருமானாகிய சிவனும் அஞ்சன வண்ணனாகிய திருமாலும் ஒன்றாய்க் கலந்து நின்று காட்சி தரும் மாட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் முதல் ஆழ்வார்கள்.

“ தாழ்சடையும் நீள்முடியும்

ஒண்மழுவும் சக்கரமும் சூழ்அரவும் பொன்நானும்

தோன்றுமால் - சூழும் திரண்டு.அருவி பாயும்

திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுஉருவும் ஒன்றாய் இயைந்து” என்று அழகாகப் பாடினார், முதல் ஆழ்வார்களுள் ஒருவர். திருமலைப் பெருமானுடைய திரு உருவத்தில் சிவனுக்கு உரிய செஞ்சடையும் திருமாலுக்கு உரிய நெடுமுடியும் இலங்கக் கண்டார் அவ் ஆழ்வார்; மேலும் மணி கண்டனுக்கு உரிய மழுப்படையும் அஞ்சன வண்ணனுக்கு உரிய ஆழிப் படையும் அமைந்து ஒளி வீசக் கண்டார்; இன்னும், அரனுக்கு உரிய நாகமும் அரியினுக்கு உரிய அரைநானும் அழகுறத் திகழக் கண்டார். ஈர் உருவும் ஒர் உருவாய் நின்ற திருக்கோலத்தைக் கண்குளிரக் கண்டு மனங் குளிரப் பாடினார்.

தமிழகத்தின் வட எல்லையில் நின்ற திருவேங்கடம் “நெடியோன் குன்ற “மாக இளங்கோவடிகளுக்குக் காட்சி அளித்தது. பொதுவாக நெடியோன் என்ற சொல் ‘ உயர்ந்தோன் என்ற பொருள் தருமாயினும் சிறப்பு வகையில் அஃது ஓங்கி உலகளந்த திருமாலையே குறிப்பதாகும். அந்த முறையில் திருவேங்கடத்தை நெடியோன் குன்றம் என்று பாடினார் அடிகள்: அம்மலையில் “ நீலமேனி நெடியோன் நின்று அருள் புரியும் நீர்மையை ஒர் அழகிய சொல்லோவியமாக எழுதிக்